News October 13, 2025

அதிகாலையில் நடைப்பயிற்சி செய்யுங்கள்!

image

தினமும் அதிகாலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி செய்வது பல்வேறு வகைகளில் பலன் தரும்.
* உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.
* மனநிலையை மேம்படுத்தும்.
* எடையை குறைக்க உதவும்.
* தசைகளை பலப்படுத்தும்.
* தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்.
* நோயெதிர்ப்பு செயல்பாடுகளை அதிகரிக்கும்.

Similar News

News October 13, 2025

சற்றுமுன்: சசிகலா வீட்டில் துயரம்.. கண்ணீர் அஞ்சலி

image

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான VK சசிகலாவின் கணவர் நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரன் காலமானார். நள்ளிரவில் அவரது வீட்டிற்கு நேரில் சென்ற சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். கடந்த 2018-ல் கணவர் நடராஜனை இழந்த சசிகலாவின் குடும்பத்தில், அடுத்த மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. OPS, TTV தினகரன், வைத்திலிங்கம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News October 13, 2025

BREAKING: தமிழகத்தில் ED அதிகாரிகள் அதிரடி ரெய்டு

image

மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிப் சிரப் குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் தமிழகத்தில் ED அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஸ்ரீசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதன் வீடு, தமிழக அரசின் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீபா ஜோசப், கார்த்திகேயன் வீடுகளில் அதிகாலை முதலே இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த வழக்கில் 2 அதிகாரிகளை TN அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருந்தது.

News October 13, 2025

அதிமுக, பாஜக துணையுடன் தவெக அற்ப அரசியல்: திமுக

image

கரூரில் இறந்தவர்களை வைத்து ADMK, BJP துணையுடன் TVK அற்ப அரசியல் செய்வதாக DMK விமர்சித்துள்ளது. RS பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், TVK சம்மந்தப்பட்ட கரூர் வழக்கில் மறைமுகமாக, இறந்தோர் குடும்பத்தினரிடம் முறைகேடாக கையெழுத்து பெற்றும், பணத்தாசை காட்டியும் CBI விசாரணை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பாஜகவின் ‘வாஷிங் மெஷின்’ அரசியல் அம்பலமாகியுள்ளது எனவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!