News January 1, 2025
தைவான் ஒன்றிணைவதை தடுக்க முடியாது: ஜி ஜின்பிங்

தைவான் மீண்டும் ஒன்றிணைவதை யாராலும் தடுக்க முடியாது என சீன அதிபர் ஜி ஜின்பிங் உறுதி அளித்துள்ளார். தைவானில் உள்ள மக்களும் சீன மக்களும் ஒரே குடும்பம் என்றார். தங்கள் பிணைப்பை யாராலும் உடைக்க முடியாது எனவும், தேசிய மறு ஒருங்கிணைப்பை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். தைவான் தங்களுக்குச் சொந்தமானது எனக்கூறி வரும் சீனா, அதனை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.
Similar News
News September 11, 2025
UAEக்கு எதிராக பும்ரா ஆடணுமா? அஜய் ஜடேஜா

UAE-க்கு எதிரான போட்டியில் பும்ரா தேர்வு செய்யப்பட்டதை அஜய் ஜடேஜா விமர்சித்துள்ளார். எப்போதும் பும்ராவை பதுக்கும் நீங்கள் UAE-க்கு எதிராக அவரை ஆட வைக்க வேண்டிய அவசியம் என்னவென்று கேள்வி எழுப்பியுள்ளார். பும்ரா காயமடைவதை தவிர்க்க விரும்பினால் இதுபோன்ற போட்டிகளில் ஆட வைக்காதீர்கள் அல்லது அவரை பாதுகாக்காதீர் என்று கூறினார். இங்கி. எதிரான முக்கியமான தொடரில் பும்ரா 3 டெஸ்ட்டில் மட்டுமே விளையாடினார்.
News September 11, 2025
செப்டம்பர் 11: வரலாற்றில் இன்று

*1803 – டெல்லியில் பிரிட்டிஷ் படைகளுக்கும், மராத்தியர்களுக்கும் இடையில் 2-ம் ஆங்கிலேய மராத்திய போர். *1921 – சுப்பிரமணிய பாரதி மறைந்த நாள். *1957 – இம்மானுவேல் சேகரன் மறைந்த நாள். *1982 – ஷ்ரேயா பிறந்தநாள். *2001 – நியூயார்க் உலக வர்த்தக மையம், பென்டகன் மீது அல்-கொய்தா நடத்திய தாக்குதல்களில் 2,974 பேர் கொலை. *2012 – பாகிஸ்தானில் ஆடை தொழிற்சாலைகளில் நிகழ்ந்த தீ விபத்தில் 315 பேர் உயிரிழப்பு.
News September 11, 2025
ஸ்ரீலீலாவின் கட்டிப்பிடி வைத்தியம்

SM-ல் ரசிகர் எழுப்பிய கேள்விக்கு நடிகை ஸ்ரீலீலா சுவாரஸ்யமான பதில் அளித்துள்ளார். மனச்சோர்வில் இருந்து விடுபடுவது எப்படி என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, ஸ்ரீலீலா உங்கள் குடும்பத்தில் ஒருவரை கட்டிப்பிடியுங்கள் எனவும் இசையைக் கேளுங்கள் என்றும் பதிலளித்தார். இது உங்களுக்கு உதவுமா என்று எனக்கு தெரியாது… ஆனால் நான் அதைத்தான் செய்கிறேன் என ஸ்ரீலீலா தெரிவித்தார்.