News May 14, 2024
12 ஆண்டுகளுக்கு பிறகு ஹாலிவுட்டில் தபு

ஹாலிவுட்டில் நேம் சேக், லைஃப் ஆஃப் பை ஆகிய 2 படங்களில் நடிகை தபு நடித்துள்ளார். இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவருக்கு ஹாலிவுட் வாய்ப்பு கிடைத்துள்ளது. ‘டூன்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் சீரிஸின் 3வது பாகத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, வெளியான இப்படத்தின் 2 பாகங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
Similar News
News March 10, 2026
தமிழக தேர்தல் தேதி… புதிய தகவல் வந்தது

புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து, மேற்கு வங்கத்திலும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை நேற்று ECI ஆய்வு செய்து முடித்துள்ளது. இதனால், மார்ச் 15-ம் தேதி தமிழ்நாட்டுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்னை, மதுரை, தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு துணை ராணுவப் படையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
News March 10, 2026
விடியல் தருவதாக கூறி விடியாத ஆட்சி: செல்லூர் ராஜு

அதிமுக கூட்டணி மீதான அச்சம் காரணமாகவே, ஸ்டாலின் ஊர் ஊராக மாநாடு நடத்துவதாக செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். திருச்சியில் நேற்று நடந்த திமுகவின் மாநாட்டிற்கு 20 லட்சம் பேர் வந்ததாக கூறினர். ஆனால், 50,000 பேர் வந்தாலும் லட்சம் பேர் வந்ததாக கூறுவார்கள் என்றார். மேலும், 5 ஆண்டுகளாக விடியல் ஆட்சி தருவதாக கூறி விடியாத ஆட்சியை தந்ததோடு, அவர்கள் சேர்த்து வைத்த பணத்தில் மக்களை கூட்டுவதாகவும் சாடியுள்ளார்.
News March 10, 2026
காங்கிரஸை போல் விசிகவிலும் இந்த பஞ்சாயத்தா?

சீட் ஷேரிங்கின் போது தவெக/திமுக ஆதரவு என காங்., 2 அணிகளாக இருந்ததை போல விசிகவில் பஞ்சாயத்து வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. குறைந்த தொகுதிகளை திமுக ஒதுக்குவதால் விசிகவில் சிலர் அதிருப்தியில் இருக்கிறார்களாம். ஆனால் இதற்கு கவலைப்படாத விசிகவினர் சிலர் CM புகழ் பாடுவதிலேயே கருத்தாக இருக்கிறார்களாம். எனவே CM விசுவாசிகளுக்கு சீட் வழங்கக்கூடாது என திருமாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


