News September 27, 2024
55,000 ஆசிரியர்களுக்கு விரைவில் டேப்லெட்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட கையடக்கக் கணினி (TAB) வழங்கும் பணி விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்களின் கற்றல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு TAB வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி, முதல்கட்டமாக 79,723 பேருக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது 55,478 பேருக்கு டேப் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Similar News
News December 5, 2025
மீண்டும் கேமியோவில் விஜய் மகன்

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் படமான சிக்மாவை விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்.. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்துக்காக விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே தமன் இசையில் படத்தில் வரும் ஒரு குத்து பாடலில் ஜேசன் சஞ்சய் கேமியோ டான்ஸ் செய்திருக்கிறாராம். ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தில் விஜய்யுடன் இணைந்து சிறு வயதில் ஜேசன் சஞ்சய் நடனமாடியிருந்தார்.
News December 5, 2025
நள்ளிரவு 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும்

நள்ளிரவு 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பொழியுதா? கமெண்ட் பண்ணுங்க
News December 5, 2025
ராசி பலன்கள் (05.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


