News January 13, 2026

T20WC: வங்கதேச போட்டிகள் மாற்றமா?

image

டி20 உலகக்கோப்பையில் வங்கதேசம் விளையாடும் போட்டிகளை மாற்றுவது குறித்து ICC எந்த ஒரு அறிவுறுத்தல்களையும் வழங்கவில்லை என BCCI தெரிவித்துள்ளது. இது BCB – ICC இடையிலான விவகாரம் என்றும், ICC மாற்ற சொன்னால் பரிசீலிப்போம் என்றும் கூறியுள்ளது. முன்னதாக, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணங்களால் கொல்கத்தாவில் நடக்க இருந்த போட்டிகள் சென்னை, திருவனந்தபுரத்திற்கு மாற்ற ICC முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

Similar News

News February 1, 2026

சினிமா இயக்குநர் கோபிநாத் நாராயணசாமி தற்கொலை

image

‘கோ’, ‘அவள்’, ‘இவன் தந்திரன்’ உள்ளிட்ட படங்களில் துணை இயக்குநராக பணியாற்றிய கோபிநாத் நாராயணசாமி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ‘கோதையின் குரல்’ என்ற குறும்படத்தை இயக்கியதன் மூலம் கவனம் பெற்ற அவர், புதிதாக தெலுங்கு படம் ஒன்றையும் இயக்கியுள்ளார். அந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், குடும்ப பிரச்னை, நிதி நெருக்கடி காரணமாக சென்னை கூவம் ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது பெரும் சோகம்.

News February 1, 2026

மோடி அரசின் வளர்ச்சிக்கான பட்ஜெட்: அமித்ஷா

image

வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை முன்னெடுப்பதற்கான மோடி அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு பிறகு மோடியின் தொலைநோக்கு பார்வை பொருளாதாரத்தை முன்னேற்றியுள்ளதாகவும், அனைத்து துறைகளின் வளர்ச்சியும் பட்ஜெட்டில் தென்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த பட்ஜெட் நிதிப்பற்றாக்குறையை 4.5% குறைவாக வைத்திருக்கும் இலக்கை நிறைவேற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

News February 1, 2026

பெட்ரூம் காட்சி.. கதறி அழுத தமிழ் நடிகை

image

‘ஐ லவ் யூ’ என்ற கன்னட படத்தில் நடித்தபோது பெட்ரூம் காட்சியில் மிகவும் நெருக்கமாக நடிக்க வேண்டியிருந்தது. இதனால் என்னை நடிகையாக வாழ்த்திய எனது பெற்றோர், இந்த காட்சியால் என்னை மகளாக ஏற்கவில்லை என்று கதறி அழுதுள்ளார், நடிகை ரச்சிதா ராம். தற்போது வரை தனது அப்பா வருந்தியதை நினைத்து நாள்தோறும் கலங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். இவர் ‘கூலி’ படத்தில் வில்லி ரோலில் நடித்திருந்தார்.

error: Content is protected !!