News June 27, 2024
T20 WC: என்ன செய்யப்போகிறது இந்தியா?

IND vs ENG மோதும் T20 WC அரையிறுதிப் போட்டி, இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. கடந்த 2022 உலக டி20 அரையிறுதிப் போட்டியில், இந்தியாவை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து IND 168 ரன்கள் எடுத்த நிலையில், ENG 16 ஓவர்களிலேயே 170 ரன்கள் அடித்தது. இன்றைய போட்டியில் இந்தியா தோல்வியை திருப்பி கொடுக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
Similar News
News January 22, 2026
BREAKING: 7 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியான சோகம்!

சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் மாவட்டத்தில் உள்ள எஃகு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 7 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், பல தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News January 22, 2026
பேரவையில் அமளி… அதிமுக வெளிநடப்பு!

விவசாயிகள் பிரச்னை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி EPS தலைமையிலான அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். விவசாயிகள் பிரச்னை குறித்து ஜீரோ நேரத்தில் பேச அனுமதி தரும்படி EPS கோரினார். ஆனால் நாளை இதுகுறித்து பேசலாம் எனக்கூறி சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனால் ஆவேசமான அதிமுக MLA-க்கள் அமளியில் ஈடுபட்டதுடன், பேரவையில் இருந்து வெளியேறி திமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
News January 22, 2026
கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது: SC

கரூரில் 41 பேர் பலியான சம்பவம் துரதிர்ஷ்டவசமானது எனவும், இதில் தலையிட்டு எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்றும் SC தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என தொடரப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக SC உத்தரவின்பேரில் CBI விசாரணை நடத்தி வருவது கவனிக்கத்தக்கது.


