News June 9, 2024
டி20 WC: இந்திய அணியின் பலம், பலவீனம்

டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இன்றிரவு விளையாடவுள்ள இந்திய அணியை பொருத்தவரை ரோஹித், கோலி ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருப்பதும், பும்ரா, அர்ஸ்தீப், சிராஜுடன் சேர்ந்து ஆல்ரவுண்டர் பாண்டியாவும் பந்துவீச ஆரம்பித்திருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், சூரியகுமார் யாதவின் சொதப்பலான பேட்டிங், அணியில் குல்தீப் யாதவ் இல்லாதது பலவீனமாக கருதப்படுகிறது.
Similar News
News September 2, 2025
BREAKING: ஓய்வை அறிவித்த மிட்செல் ஸ்டார்க்!

ஆஸி. இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்(35) T20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை 65 T20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 79 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். ஆஸி. அணிக்காக அதிக T20 விக்கெட்களை வீழ்த்திய பெருமையயும் ஸ்டார்க்கையே சேரும். வரும் 2027 உலக கோப்பை ODI & டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
News September 2, 2025
அதிமுக கூட்டணியில் வெடித்தது சர்ச்சை

நேற்று மதுரையில் நடந்த பரப்புரையின்போது, பாஜக முக்கிய தலைவர்களை EPS புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதுவரை நடந்த கூட்டங்களில் அந்தந்த ஊர்களின் முக்கிய கூட்டணி கட்சியினரை தன்னுடன் நிற்கவைத்து EPS பேசுவது வழக்கம். ஆனால், நேற்று ராம.சீனிவாசன் உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்களை பிரசார வாகனத்தில் ஏற்றவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த அவர்கள், இபிஎஸ் பேசி முடிப்பதற்கு அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளனர்.
News September 2, 2025
மூட்டுவாதம் வராமல் தடுக்கும் ‘கருடாசனம்’

☆மூட்டுவாதம், தொடை சதை குறைய உதவும்.
➥உடலை நிமிர்த்தி வைத்து, பாதங்களை ஒன்றாக வைக்கவும்.
➥வலது முழங்காலை வளைத்து, வலது காலை தூக்கி இடது முழங்காலின் மீது சுற்றவும்.
➥அதே போல, கைகளையும் ஒன்றன் மீது மற்றொன்றை வளைத்து கைகளை, படத்தில் உள்ளது போல வைக்கவும்.
➥இந்த நிலையில், 15- 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். இதே போல, 2 கால்களையும் மாற்றி செய்யவும். SHARE IT.