News June 27, 2024

T20 WC: இந்திய அணி பேட்டிங்

image

டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Similar News

News December 14, 2025

U-19 ஆசிய கோப்பை: இன்று Ind Vs Pak

image

துபாயில் நடைபெறும் U-19 ஆசிய கோப்பை தொடரில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தனது முதல் போட்டியில் UAE-ஐ 234 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, இந்த போட்டியிலும் தனது ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில் பாகிஸ்தான் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. சமபலம் கொண்ட இரு அணிகள் மோதுவதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 14, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 549 ▶குறள்: குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
▶பொருள்: குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்.

News December 14, 2025

50% ஊழியர்களுடன் மட்டும் செயல்பட அனுமதி: டெல்லி அரசு

image

காற்றுமாசால் <<18550190>>திணறி வரும் டெல்லியில்,<<>> பள்ளிகள் மற்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிகளில் 1 முதல் 9-ம் மாணவர்களுக்கு, நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகளை கலந்து நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50% ஊழியர்கள் WFH செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. மறுஅறிவிப்பு வரும் வரை இது தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!