News June 9, 2024
T20 WC: இந்திய அணி பேட்டிங்

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது. இந்திய அணி வீரர்கள்: ரோஹித், கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார், டூபே, பாண்டியா, ஜடேஜா, அக்ஷர் படேல், பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இப்போட்டியில் களமிறங்குகின்றனர். இன்று எந்த அணி வெற்றிபெறும்?
Similar News
News November 11, 2025
ரோஹித்துக்கு சோதனை காலம்: முகமது கைஃப்

2026 ஐபிஎல் ரோஹித் சர்மாவிற்கு சோதனை காலம் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ரோஹித் ஒரு சீசனில் கூட 600 ரன்களை தொட்டது கிடையாது எனவும், ஓரிரு போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெறுவதோடு சரி என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், கோலி, சாய் சுதர்சன் போன்றவர்கள், 600+ ரன்களை கடந்துவிட்டதாகவும், எனவே ஒரு பேட்ஸ்மேன் என்ற முறையில், ரோஹித் ரன்களை குவிப்பார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
மாத்திரை சாப்பிட்டு உடல் எடை குறைக்கிறாரா தமன்னா?

மருந்துகளை உட்கொண்டு, தமன்னா எடையை குறைத்து வருவதாக சமீபத்தில் தகவல் பரவியது. ஆனால், இதை மறுத்துள்ள அவர், தனது உடலில் நடக்கும் அனைத்து மாற்றங்களும் இயற்கையானதுதான் என தெரிவித்துள்ளார். மேலும், ஒரு பெண்ணின் உடல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும். பாலிவுட் ரசிகர்களுக்கு, இந்த உடல்வாகு புதுமையாக தெரியலாம். ஆனால், தென்னிந்திய ரசிகர்கள் தன்னை ஆரம்பத்தில் இருந்து பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
நவம்பர் 11: வரலாற்றில் இன்று

*தேசிய கல்வி தினம். *1821 – ரஷ்ய எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி பிறந்தநாள். *1888 – விடுதலை போராட்ட வீரர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்தநாள். *1899 – தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் பிறந்தநாள். *1933 – யாழ் பொது நூலகம் திறக்கப்பட்டது. *1974 – ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ பிறந்தநாள். *1994 – கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் பிறந்தநாள். *2004 – பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசிர் அராஃபத் இறந்தநாள்.


