News April 30, 2024

டி20 WC: தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

image

மார்க்ரம் தலைமையிலான 15 பேர் கொண்ட உலகக் கோப்பை டி20 அணியைத் தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது. அதில், பார்ட்மேன், கோட்சீ, டி காக், பஜோரன், ரீஜா ஹெண்ட்ரிக்ஸ், மார்க்கோ ஜான்சன், கிளாசன், கேசவ் மகாராஜ், மில்லர், ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், நோர்க்யா, ரிக்கெல்டன், சம்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். டி20 உலகக் கோப்பைப் போட்டி ஜூன் 2ஆம் தேதி தொடங்க உள்ளது.

Similar News

News March 17, 2026

CVS மீது ECI நடவடிக்கை எடுக்கணும்: பாலபாரதி

image

<<19406314>>நடிகை நயன்தாரா<<>> குறித்து C.V.சண்முகம் சர்ச்சையாக பேசியது அரசியல் ரீதியாக விவாதப்பொருளாக மாறியுள்ளது. தமிழ்நாட்டு பெண்களிடம் சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று Ex MLA பாலபாரதி, வலியுறுத்தியுள்ளார். மேலும், பெண்கள் குறித்து சி.வி.சண்முகம் இவ்வாறு பேசுவது, இது முதல்முறை அல்ல என்றும் அவர் தேர்தலில் போட்டியிடாத வகையில் ECI நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News March 17, 2026

அதிக நேரம் ரம்ஜான் நோன்பு இருப்பவர்கள் யார் தெரியுமா?

image

ரம்ஜான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை உண்ணாமல், நீர் அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். சூரிய உதயம், மறைவை பொறுத்து ஒவ்வொரு நாட்டிலும் நோன்பு நேரம் மாறுபடுகிறது. கிரீன்லாந்து, ஐஸ்லாந்து நாட்டு மக்கள் ஒருநாளில் 16 மணி 30 நிமிடங்கள் நோன்பு இருக்கிறார்களாம். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் 13 மணி 45 நிமிடங்கள் நோன்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

News March 17, 2026

திமுக கூட்டணியில் தொடரும் இழுபறி

image

திமுக – சிபிஎம் இடையில் இன்று நடைபெற்ற 3-ம் கட்ட தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. இதுகுறித்து பேசிய பெ.சண்முகம், கடந்த தேர்தலை ( 6 தொகுதிகள்) விட, கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக கூறினார். மேலும், திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்திருப்பதால், பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை; விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்றார்.

error: Content is protected !!