News June 22, 2024
T20 WC: ENG அணியை வீழ்த்தியது SA அணி

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் 5ஆவது போட்டியில், ENG அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் SA அணி வென்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த SA அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய ENG அணியை, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களுக்குள் சுருக்கி SA அணி த்ரில் வெற்றி பெற்றது.
Similar News
News September 16, 2025
ASIA CUP: சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா

இன்னும் ஒரு போட்டி மிச்சமிருக்கும் நிலையிலும், ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி அட்வான்ஸாக முன்னேறியுள்ளது. ஓமனுக்கு எதிரான போட்டியில் UAE வென்ற நிலையில், இந்திய அணிக்கான ரூட் கிளியரானது. முன்னதாக, UAE மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து சிறப்பான ரன்ரேட் (4.793) அடிப்படையில் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
News September 16, 2025
ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்

*தனது ஞாபக சக்தியில் நம்பிக்கை இல்லாதவன், பொய் சொல்ல முயற்சி செய்யக் கூடாது. *சிறு துன்பங்கள் வாய்திறந்து பேசும். பெருந்துன்பங்கள் ஊமையாக்கும். *சுகபோகத்தில் வளர்பவர்கள் எப்போதும் ஆணவம், கர்வம், பொய் வேஷம் இவற்றில் திறமை பெற்றவர்களாக விளங்குகிறார்கள். *நிகழ் காலத்தில் வாழத் தெரியாமல் வருங்காலத்திய துக்கம், பயன், நம்பிக்கை என்னும் கயிறுகளில் ஊசலாடுவது மனித குலத்தின் இயல்பு.
News September 16, 2025
இந்தியா முழுவதும் SIR? அக்.7-ல் தீர்ப்பு

பிஹாரில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்த்திருத்த (SIR), நடைமுறைகளில் முறைகேடு கண்டறியப்பட்டால், அதை முழுமையாக ரத்து செய்ய நேரிடும் என சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது. மேலும், இது தொடர்பாக வரும் அக்.7-ல் இறுதி விசாரணை நடைபெறும் எனவும், அது இந்தியா முழுமைக்கும் SIR மேற்கொள்ளப்படுமா என்பதற்கான உத்தரவாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது.