News June 1, 2024
T20 WC: அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

T20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் (63) தன வசம் வைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து ரோஹித் ஷர்மா (35), பட்டர் (33), யுவராஜ் (33), வார்னர் (31), ஷேன் வாட்சன்(31), டி வில்லியர்ஸ்(30), விராட் கோலி(28) ஆகியோர் உள்ளனர். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் கெயிலின் சாதனையை முறியடிக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
Similar News
News September 19, 2025
நான் டிரம்பின் ஆதரவாளர் அல்ல: போப் லியோ

தான் டிரம்பின் ஆதரவாளர் அல்ல என போப் லியோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசியலில் தலையிட விரும்பவில்லை என்ற அவர், அதேநேரம் அங்கு நிலவும் புலம் பெயர்ந்தோர் பிரச்சனைக்கு எதிராக குரல் கொடுப்பேன் என கூறியுள்ளார். இதுவரை தான் டிரம்பிடம் பேசவில்லை என கூறிய போப், அவரின் கொள்கை முடிவுகளில் மாறுபட்ட கருத்த உள்ளதாகவும் தனது முதல் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
News September 19, 2025
USA-வில் இந்திய மாணவர் என்கவுன்டர்.. நடந்தது என்ன?

USA-வில் PG படித்து வந்த தெலங்கானாவை சேர்ந்த முகமது நிஜாமுதீன்(30) அந்நாட்டு காவல்துறையால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். ஹாஸ்டலில் உடன் இருந்தவரை கத்தியால் குத்தியதற்காக அவரை சுட்டு கொன்றதாக போலீசார் கூறியுள்ளனர். செப்.3-ம் நடந்த இந்த சம்பவம் 2 வாரங்களுக்கு பிறகே குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இனவெறி பிரச்னையே காரணம் என மாணவனின் குடும்பத்தார் குற்றம்சாட்டியுள்ளனர்.
News September 19, 2025
உங்களை கேன்சரில் இருந்து தள்ளி வைக்கும் உணவுகள்

இந்த காலத்தில் எதை செய்தாலும், சாப்பிட்டாலும் கேன்சர் வந்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. எனவே கேன்சரில் இருந்து தற்காத்துக்கொள்ள வாழ்வியல் முறை, உணவு பழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம். என்ன உணவுகள் உடலில் கேன்சர் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது என்பதை தெரிந்துகொள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். அனைவருக்கும் மறக்காமல் SHARE செய்யுங்கள்.