News June 27, 2024
T20 WC: மீண்டும் குறுக்கிட்ட மழை

T20 WCல் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக டாஸ் தாமதமான நிலையில், சற்று தாமதமாக டாஸ் போடப்பட்டு இந்திய அணி பேட்டிங் செய்து வந்தது. 8 ஓவரில் இந்தியா 65/2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. மழை நின்றபின் போட்டி மீண்டும் தொடங்கும் எனத் தெரிகிறது.
Similar News
News November 28, 2025
தேர்வு இல்லாமல் மத்திய அரசில் 156 வேலைவாய்ப்பு!

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் ஃபிட்டர், உள்ளிட்ட 156 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: ITI. மார்க் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோருக்கு உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.8. இங்கே <
News November 28, 2025
லோகேஷ் இயக்கத்தில் அல்லு அர்ஜுனா?

லோகேஷிடம் கதை கேட்ட அல்லு அர்ஜூன், அக்கதை பிடித்துப்போக ஸ்கிரிப்ட் வேலைகளை உடனே தொடங்க சொல்லியதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்லு, தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். அதேநேரம், ‘கூலி’ பட தோல்விக்கு பிறகு ‘DC’ படத்தில் நடித்து வரும் லோகேஷ், ‘கைதி 2’ படத்தை இயக்கும் முனைப்பில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லோகேஷ் – அல்லு அர்ஜுன் காம்போ எப்படி இருக்கும்?
News November 28, 2025
கேட்ட வரத்தை தரும் நட்சத்திர தீப வழிபாடு!

திருவோண நட்சத்திரத்திற்கு முன் 24 நிமிடங்கள் மட்டுமே வரும் அபிஜித் நட்சத்திரத்திடம் முழு மனதோடு வேண்டினால், கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அகல் விளக்கில் 1 ஸ்பூன் பச்சை பயிரை சேர்த்து, நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். கிருஷ்ணரின் படத்திற்கு முன் இந்த தீபத்தை ஏற்றி வைத்து, முழு மனதோடு ஏதாவது ஒரு காரியத்தை முன்வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


