News January 18, 2026
T20 WC: ICC-க்கு ஐடியா கொடுத்த வங்கதேசம்

T20 WC போட்டிகளுக்கு இந்தியா வராது என்று வங்கதேசம் ICC-யிடம் தெரிவித்துள்ளது. தங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் வங்கதேச கிரிக்கெட் வாரியம், ICC-க்கு ஓர் ஐடியாவை வழங்கியுள்ளது. அயர்லாந்துடன் குழுக்களை மாற்றிக்கொண்டு, தங்களது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடலாம் என்று பரிந்துரைத்துள்ளது. மேலும், இந்தியாவுக்கு பயணம் செய்ய போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது.
Similar News
News February 12, 2026
ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: கிரண் ரிஜிஜு

பட்ஜெட் விவாதத்தில் ராகுல் உருப்படியான எந்த கருத்துகளையும் முன்வைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சித்துள்ளார். இந்தியா மற்றும் இந்தியர்களின் நலன்களை பிரதமர் விற்றுவிட்டார் என உள்நோக்கத்துடன் பொய் கூறிய ராகுல், மத்திய அமைச்சர் பதில் அளித்ததை கூட கேட்காமல் அவையை விட்டு ஓடி விட்டார். இது மரபு இல்லை எனக் கூறிய ரிஜிஜு, ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்புவோம் என்றார்.
News February 12, 2026
தேமுதிகவுடன் கூட்டணி பேச்சா? நயினார் ரியாக்ஷன்

தேமுதிகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக திண்டுக்கல் சீனிவாசன் நேற்று தெரிவித்திருந்தார். இதுகுறித்த கேள்விக்கு, இதுவரையிலும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று நயினார் பதிலளித்துள்ளார். சுதீஷ் தன்னுடைய நல்ல நண்பர், அதன் அடிப்படையில் பேசினேன், கூட்டணி தொடர்பாக பேசவில்லை எனக் கூறிய அவர், PM மோடி மார்ச் 1-ல் வருகிறார், அதற்குள் நல்லது நடக்கலாம் என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.
News February 12, 2026
ஜெயகாந்தனின் பொன்மொழிகள்

▶வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்தமாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை. ▶உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை. ஒரு நல்ல நம்பிக்கையைச் சிதைக்காமலிருப்பதே மிகவும் முக்கியம் ▶சுயவிமர்சனம் உடையோரை, பிற விமரிசனங்கள் பாதிப்பதில்லை. ▶வாழ்க்கை சொர்க்கமா ஆகறதுக்குப் பணம் மட்டும் காரணமில்லேதான், ஆனா நரகமா வாழ்க்கை ஆகறதுக்குப் பணம் இல்லேங்கற ஒரே காரணம் போதும்.


