News June 20, 2024
T20 WC: இங்கிலாந்துக்கு 181 ரன்கள் இலக்கு

இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 180/4 ரன்களை குவித்துள்ளது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் ஜான்சன் சார்லஸ் 38, நிக்கோலஸ் பூரன் 36, ரோவ்மேன் பவல் 36, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 28 ரன்களை எடுத்தனர். இங்கிலாந்து அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சர், மொயின் அலி, அடில் ரஷித், லியாம் லிவிங்ஸ்டோன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
Similar News
News September 11, 2025
ஜிவி சம்பளம் வாங்காத படங்களின் லிஸ்ட்

காக்கா முட்டை, சைவம் படங்கள் குழந்தைகள் சார்ந்த நல்ல கதை என்பதால், அப்படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை என ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நடித்துள்ள பிளாக்மெயில் பட நிகழ்ச்சியில் பேசும்போது, வசந்தபாலன் தன்னை அறிமுகப்படுத்தியதால், அவர் இயக்கிய அநீதி படத்திற்கும், அதேபோல் வெற்றிமாறனின் விசாரணை படத்திற்கும் சம்பளம் வாங்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
News September 11, 2025
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி… உங்க லிவரை பாருங்க

தொடர்ந்து, நீண்டகாலமாக மது அருந்துவது கல்லீரலை முற்றிலுமாக பாதிக்கும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். ஒருவர் அருந்தும் மதுவை கல்லீரல் முழுமையாக ஜீரணிப்பதுடன், அப்போது பல ரசாயனங்களையும் வெளிவிடுகிறது. இதன் ஆபத்துகளை உணர்த்தும் வகையில் பிரபல ‘லிவர் டாக்டர்’ சிரியாக் ஆபி பிலிப்ஸ், மதுவால் கல்லீரல் நோய் பாதித்த ஒருவரின் போட்டோவை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த பின்பும் குடிக்க தோணுதா?
News September 11, 2025
இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த நேபாள தலைவர்

PM மோடி மீது தனக்கு நன்மதிப்பு உள்ளதாக நேபாளத்தின் இடைக்கால அரசு தலைவர் சுசீலா கார்கி தெரிவித்துள்ளார். இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்த அவர், போராட்டத்தில் கொல்லப்பட்ட இளைஞர்களை கவுரவிப்பதே தனது முதன்மையான பணி என கூறியுள்ளார். அதேபோல் சுசீலாவை இடைக்கால தலைவராக ஏற்றுக் கொண்ட Gen Z போராட்ட குழு, அடுத்த 6 மாதத்திற்குள் பொதுத்தேர்தலை நடத்தவும் வலியுறுத்தியுள்ளது.