News November 25, 2025

T20 WC: சேப்பாக்கத்தில் 7 போட்டிகள்

image

2026 டி20 உலகக் கோப்பை தொடரின், 7 போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. NZ Vs AFG, NZ Vs UAE, USA Vs NED, USA Vs NAM, NZ Vs CAN, AFG Vs CAN லீக் போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளன. ஒரு சூப்பர் சிக்ஸ் போட்டி பிப்.27-ம் தேதி நடைபெறுகிறது. இந்திய அணியின் ஒரு போட்டி கூட சேப்பாக்கத்தில் அறிவிக்கப்படாததால் Knowledgeable Chennai Crowd அதிர்ச்சி அடைந்துள்ளது.

Similar News

News November 28, 2025

Gen Z தலைமுறையை நெகிழ்ந்து பாராட்டிய PM மோடி

image

இந்திய இளைஞர்கள் நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக PM மோடி தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவன வளாகத்தை திறந்து வைத்து பேசிய அவர், இன்று Gen Z பொறியளார்கள், வடிவமைப்பாளர்கள், Coding பணிகளை மேற்கொள்பவர்கள், விஞ்ஞானிகள், ராக்கெட் நிலைகள், செயற்கைக்கோள் தளங்கள் ஆகியவற்றிலும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதாகவும் கூறியுள்ளார்.

News November 28, 2025

தோனியும் பவுமாவும் ஒன்று: ஏபி டி வில்லியர்ஸ்

image

தோனியின் கேப்டன்சி பற்றி SA வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பேசியது வைரலாகிறது. கேப்டன்சியை கையாள்வதை பொறுத்தவரை டெம்பா பவுமா, தோனியை போன்றவர் என அவர் கூறியுள்ளார். தோனி எப்படி அமைதியாகவும், அதிகம் பேசாதவராகவும், அவர் பேசும்போது அணியின் வீரர்கள் எப்படி கவனிப்பார்களோ, அப்படித்தான் பவுமாவும் செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார். தோனியின் பெஸ்ட் கேப்டன்சி மொமண்ட் எது?

News November 28, 2025

பலதார மணம் செய்தால் 10 ஆண்டு சிறை!

image

அசாமில் ஆண்கள் பலதார மணம் செய்வதை தடுக்க பலதார மண தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது. முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்தால் குறைந்தபட்ச தண்டனையாக 7 ஆண்டு சிறை தண்டனை முதல் அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டத்தை அசாம் அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டம் பெண்களை பாதுகாக்கும் என்றும், பலதார மணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்க உதவும் எனவும் அசாம் CM தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!