News February 9, 2026

T20 WC: இலங்கையிடம் போராடி அயர்லாந்து தோல்வி

image

டி20 உலகக்கோப்பையில் 20 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை வெற்றிபெற்றது. இலங்கை அணி தரப்பில் குஷல் மெண்டிஸ்(56), கமிந்து மெண்டிஸ்(44) சிறப்பாக விளையாட 163/6 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய அயர்லாந்தில் யாரும் பெரிய ஸ்கோர் அடிக்காததால் 143 ரன்கள் ஆல் அவுட்டாகி தோல்வியை தழுவியது. இலங்கை தரப்பில் தீக்‌ஷனா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

Similar News

News February 9, 2026

சற்றுமுன்: தங்கம் விலை ஒரே அடியாக மாறியது

image

சர்வதேச சந்தை எதிரொலியால் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 4 நாள்களில் (ஞாயிற்றுக்கிழமையை தவிர) சவரனுக்கு ₹3,840 குறைந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ்(28g) தங்கம் விலை $65 உயர்ந்து $5,033-ஆக உள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதனால், நம்மூரிலும் தங்கம் விலை இன்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.

News February 9, 2026

விடாப்பிடியாக இருக்கும் காங்., கறார் காட்டும் திமுக

image

தொகுதிப் பங்கீடு குறித்து பேச 36 நாட்களாக காங்., குழு காத்திருக்கும் நிலையில், திமுகவோ இன்னும் குழுவை அமைக்கவில்லை. இதற்கு காரணம் காங்., 41 தொகுதிகள் வேண்டும் என விடாப்பிடியாக இருப்பதுதான் என கூறப்படுகிறது. காங்கிரஸுக்கு அதிக சீட் கொடுத்தால் கூட்டணியில் பிரச்னை வந்துவிடும். சீட் எண்ணிக்கையை குறைத்தால் மட்டுமே தொகுதிப்பங்கீடு குறித்து பேச முடியும் என்பதில் திமுகவும் விடாப்பிடியாக இருக்கிறதாம்.

News February 9, 2026

காழ்ப்புணர்ச்சியால் அதிமுக மீது திமுக விமர்சனம்

image

‘எப்போதும் அதிமுக தனது சுயமரியாதையை விட்டுக்கொடுத்தே இல்லை என்று உதயநிதிக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா பதிலடி கொடுத்துள்ளார். திமுகவின் விமர்சனங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவை எனக்கூறிய அவர், மக்களின் செல்வாக்கு அதிமுகவிற்கே உள்ளது என்பதை வரும் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும்; அதிமுக எவருக்கும் கிளையாக மாறாது, அது தனித்துவமான இரட்டை இலை எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!