News July 7, 2024
டி20: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

இந்தியா-தென்னாப்பிரிக்கா பெண்கள் அணிகள் மோதும் 2ஆவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
Similar News
News September 24, 2025
ராசி பலன்கள் (24.09.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News September 24, 2025
அதிமுக ஆபிஸின் அதிகாரம் டெல்லியில் உள்ளது: கனிமொழி

அமித்ஷா வீட்டில் தான் அதிமுகவின் ஆபீஸ் உள்ளது என்று கனிமொழி கூறியதற்கு, திமுகவின் அறிவாலயத்தை காப்பாற்றி கொடுத்ததே ஜெயலலிதா தான் என்று EPS பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில், அதிமுக ஆபிஸ் பில்டிங் மட்டுமே இங்கு உள்ளது, ஆபிஸின் அதிகாரம் டெல்லியில் உள்ளது என்று கனிமொழி விமர்சித்துள்ளார். என்னதான் கர்சீப்பை வைத்து மறைத்தாலும், அது நீங்கள் (EPS) தான் என்று பட்டவர்த்தனமாக தெரிவதாகவும் சாடினார்.
News September 24, 2025
தேசிய விருதுடன் திரையுலக நட்சத்திரங்கள்

71-வது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த நடிகர் – ஷாருக்கான், சிறந்த துணை நடிகர் – எம்.எஸ் பாஸ்கர், சிறந்த துணை நடிகை – ஊர்வசி, சிறந்த இசையமைப்பாளர் – ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதை – ராம்குமார், தாதா சாகேப் பால்கே – மோகன்லால் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நட்சத்திரங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, SWIPE செய்து புகைப்படங்களை தவறாமல் பாருங்க..