News January 23, 2025
T20: இரவு 12:00 மணி வரை மெட்ரோ இரயில் சேவை

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் (TNCA) இணைந்து, ஜனவரி 25ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியைப் பார்வையிட வருபவர்களுக்கு தடையற்ற போக்குவரத்தை வழங்குவதற்காக இரவு 12:00 மணி வரை மெட்ரோ இரயில் சேவையை நீட்டித்துள்ளது.
Similar News
News July 11, 2025
சென்னை பல்கலை., முதுநிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை பல்கலைக்கழகத்தின் முதுநிலை மற்றும் தொழிற்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை.11) மாலை வெளியிடப்பட உள்ளன. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://egovernance.unom.ac.in/results/ என்ற இணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இத்தேர்வுகளின் முடிவுகளை, மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.
News July 11, 2025
மன நிம்மதியை வழங்கும் கச்சாலீஸ்வரர்

சென்னை பாரீஸ் கார்னர் அருகே உள்ள ஜார்ஜ் டவுன் பகுதியில் அமைந்துள்ளது கச்சாலீஸ்வரர் கோயில். இது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இங்கு மூலவர் லிங்கத்தின் பின்னால் ஐந்து தலைகளுடன் கூடிய சதாசிவம் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையை தீபாராதனை செய்யப்படும்போது மட்டுமே காண முடியும். மன நிம்மதியை இழந்து தவிப்பவர்கள் இங்கு சென்று தியானம் செய்து வழிபட்டால் ஆறுதல் அடைய முடியும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!
News July 11, 2025
குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

சென்னையில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க