News October 8, 2025
சிரப் விவகாரம்: 20 குழந்தைகள் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிப் சிரப் குடித்து உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில Dy.CM ராஜேந்திர சுக்லா தெரிவித்துள்ளார். நாக்பூர் ஹாஸ்பிடல்களில் ஆய்வு நடத்திய அவர், சிந்த்வாரா மாவட்டத்தில் மட்டும் இதுவரை 17 குழந்தைகள் உயிரிழந்து இருப்பதாகவும், சிரப் குடித்தால் வாந்தி எடுப்பது, சிறுநீர் கழிப்பதில் சிக்கல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாக கூறியுள்ளார்.
Similar News
News October 8, 2025
பணப்புழக்கம் அதிகரிக்க 50:30:20 ரூல் தெரிஞ்சிக்கோங்க!

பணத்தை எப்படி செலவு செய்கிறோம் என்பதில் கவனம் இல்லை என்றால், கஷ்டம்தான். எப்போதும், பணத்தை 50:30:20 என பிரிப்பது நல்லது. 50% அத்தியாவசிய தேவைக்கு. 30% விரும்பும் விஷயங்களுக்கு செலவிட. 20% சேமிப்புகளுக்கு. இந்த ரூலை ஃபாலோ பண்ணி பாருங்க. அதே போல, ஒரு ஃப்ரீ அட்வைஸ், ஒரு பொருளை வாங்கணும் என தோன்றினால், 24 மணி நேரம் காத்திருங்க. பிறகு யோசியுங்க. அது கண்டிப்பாக தேவையா என.. பதில் கிடைக்கும். SHARE IT.
News October 8, 2025
இது நடந்தால் தங்கம் விலை குறையும்

நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மோதல்கள், குறிப்பாக டிரம்ப் தொடங்கிய வர்த்தக போர் முடிவுக்கு வர வேண்டும்; மத்திய வங்கிகள் வட்டி குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும்; புவிசார் மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும்; உலக நாடுகள் தங்கம் இருப்பு வைப்பதை குறைக்க வேண்டும்; பத்திரங்களின் வட்டி விகிதம் உயர வேண்டும்; பணவீக்கம் குறையவேண்டும்; இவை நடந்தால் தங்கம் விலை குறையும் என நிபுணர்கள் சொல்றாங்க. SHARE.
News October 8, 2025
கால் பாதவலி நீக்க உதவும் யோகாசனம்!

✦உட்காட்சனம் செய்வதால், கால்கள் வலுபெற்று, பாத வலி நீங்கும் என கூறப்படுகிறது ✦முதலில் விரிப்பில் நேராக கால்களை இடையில் கொஞ்சம் இடைவெளிவிட்டு நிற்கவும் ✦முதுகை வளைக்காமல் கால்களில் அழுத்தம் கொடுத்து, வளைந்து (படத்தில் உள்ளது போல) நிற்கவும் ✦இதே நிலையில், இரு கைகளையும் மேலே நீட்டி நிற்கவும் ✦இந்த நிலையில், 15- 20 நிமிடங்கள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.