News December 8, 2024

நாட்டை விட்டு சிரியா அதிபர் தப்பி ஓட்டம்?

image

சிரியாவில் உள்ள முக்கிய பகுதிகளை கைப்பற்றிய துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் படை, தலைநகர் டமாஸ்கசை நோக்கி முன்னேறி வருகிறது. இதனால் கிளர்ச்சியாளர்கள் கையில் சிக்கிவிடக் கூடாது என சிரியா அதிபர் ஆசாத் நாட்டை விட்டு தப்பியோடி விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்தத் தகவலை சிரியா அரசுத் தொலைக்காட்சி மறுத்துள்ளது. சிரியாவில்தான் ஆசாத் இன்னும் இருக்கிறார் என அது செய்தி வெளியிட்டுள்ளது.

Similar News

News September 12, 2025

BREAKING: தீபாவளி பரிசாக ₹2,000?.. அரசு புதிய தகவல்

image

தீபாவளி பரிசாக PM KISAN திட்ட 21-வது தவணை தொகையை விரைவில் வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. நாடு முழுவதும் சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு 4 மாத இடைவெளியில் தலா ₹2,000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த தவணை ஆக.2-ல் டெபாசிட் செய்யப்பட்டது. இந்நிலையில், வடமாநில வெள்ள பாதிப்பு கருதி தீபாவளி பண்டிகைக்கு முன் (அக்டோபர்) அடுத்த தவணை வரவு வைக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News September 12, 2025

Parenting: உங்கள் குழந்தையை இதிலிருந்து காப்பாத்துங்க

image

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன. இதிலிருந்து உங்கள் குழந்தையை காக்க, அவர்களுக்கு சில விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். ➤அந்தரங்க உறுப்புகள் பற்றி கற்பியுங்கள் ➤தங்கள் அனுமதி இல்லாமல் யாரும் அவர்களை தொடக்கூடாது என சொல்லுங்கள் ➤எது நடந்தாலும் பெற்றோரிடம் சொல்லவேண்டும் என கூறுங்கள் ➤Good Touch, Bad Touch-ஐ விளக்க விழிப்புணர்வு வீடியோக்களை போட்டு காட்டுங்கள். SHARE.

News September 12, 2025

சுக்கிரன் பெயர்ச்சி.. பண மழையில் 3 ராசிகள்!

image

செல்வம், மகிழ்ச்சியை பெருக்கும் சுக்கிர பகவான், செப்.15-ல் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம். *சிம்மம்: தொழிலில் முன்னேற்றம். எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். *துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். விருச்சிகம்: புதிய வருமான வழி உருவாகும். பணப் பற்றாக்குறை நீங்கி நிதி நிலைமை வலுப்பெறும்.

error: Content is protected !!