News April 1, 2025

நவீன தமிழ் சினிமாவின் அடையாளங்கள்

image

இயக்குநர் பாலசந்தரின் படங்களில்தான் முதன்முதலில் வலிமையான பெண் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டன. கிராமத்து மண்வாசனை, உறவுமுறைகளை திரையில் காட்டி பாரதிராஜா புரட்சி செய்தார். பாலுமகேந்திராவின் படங்கள் எளிமையும், நுண்ணுணர்வும் மிக்கதாய் இருக்கும். தமிழ் சினிமாவில் டெக்னாலஜிக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் மணிரத்னம். இவரது படங்களில் காட்சியமைப்பு தனித்துவம் மிக்கதாய் இருக்கும்.

Similar News

News April 2, 2025

வக்ஃபு மசோதாவை திரும்ப பெறுக.. முதல்வர் கடிதம்

image

வக்ஃபு திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்திய அரசமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் மதங்களை பின்பற்ற உரிமை வழங்குகிறதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் 1995ம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்யும் ஒன்றிய அரசின் முடிவை திரும்பபெற வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

News April 2, 2025

பாகிஸ்தான் அதிபர் ஹாஸ்பிடலில் அனுமதி!

image

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 69 வயதான அவர், கராச்சியில் இருக்கும் ஒரு தனியார் ஹாஸ்பிடலில், காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார். டாக்டர்கள் பலமுறை மருத்துவ பரிசோதனை செய்து அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.

News April 2, 2025

வக்ஃபு மசோதா சொல்வது என்ன?

image

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட <<15966796>>வக்ஃபு <<>>மசோதாவில் 44 திருத்தங்கள் இடம் பெற்றுள்ளன. முக்கியமாக தணிக்கை அதிகாரம் மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு மாற்றம், 6 மாதங்களுக்கு ஒரு முறை வக்பு சொத்துகளின் விவரங்களை தெரிவிக்க வேண்டும், வக்ஃபு வாரியங்களில் இஸ்லாமியர்கள் அல்லாத 2 உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

error: Content is protected !!