News March 22, 2025

சுவிஸ் ஓபன்: அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய ஜோடி

image

சுவிஸ் ஓபன் தொடரில் இந்தியாவின் த்ரிஷா ஜோலி – காயத்ரி கோபி சந்த்ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் த்ரிஷா – காயத்ரி இணை, ஹாங்காங்கின் யூங் புய் லாம் – யூங் டிங் இணையை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி 21-18, 21-14 என்ற நேர் செட் கணக்கில் ஹாங்காங் வீராங்கனைகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

Similar News

News March 22, 2025

ஐபிஎல் போட்டி இன்று நடக்குமா?

image

நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் RCB-ம், KKR-ம் மோதும் முதல் போட்டி இரவு 7.30-க்கு தொடங்கும் நிலையில், அங்கு மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. மேலும், கொல்கத்தாவில் மிக கனமழைக்கான அலர்ட்டையும் வானிலை மையம் விடுத்திருப்பதால், இன்று போட்டி நடைபெறுமா என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

News March 22, 2025

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

image

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று (மார்ச் 22) உயர்ந்துள்ளது. நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ₹100.80க்கு விற்பனையான நிலையில், இன்று 0.13 காசுகள் உயர்ந்து ₹100.93க்கு விற்பனையாகிறது. அதேபோல் டீசல் விலையும் ஒரு லிட்டருக்கு 0.13 காசுகள் உயர்ந்து ₹92.52க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால், வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனர். உங்கள் ஊரில் பெட்ரோல் விலை என்ன?

News March 22, 2025

அனைத்து போலீசாருக்கும் பறந்த எச்சரிக்கை!

image

ஐஜிக்கள் மற்றும் டிஐஜிக்களுடன் டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளின் பட்டியலை உடனடியாக தாக்கல் செய்யுமாறு சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதேபோல, ரவுடிகள் குறித்து உளவு போலீசார் தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.க்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் பாயும் எனவும் அவர் எச்சரித்தார்.

error: Content is protected !!