News October 29, 2024

IPO மூலம் ₹11,300 கோடி திரட்டும் SWIGGY

image

நாட்டின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான SWIGGY, புதிய பங்குகள் வெளியீடு வாயிலாக ₹11,300 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில், முதலீட்டாளர்களின் வசமுள்ள பங்குகளை விற்று ₹6,800 கோடியும், புதிய IPO மூலம் ₹4,500 கோடியும் நிதி திரட்டவுள்ளது. சில்லறை முதலீட்டாளர்கள் வரும் நவ.6-8இல் பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம் என ஸ்விக்கி அறிவித்துள்ளது. பங்கு ஒன்றின் விலை, ₹371 – ₹390 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 11, 2025

கள்ளக்குறிச்சியில் குரூப் 4 தேர்வு கண்காணிப்பு பணிகள் தீவிரம்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 பதவிகளுக்கான தேர்வு நாளை (ஜூலை 12) நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 97 தேர்வு கூடங்களில் 28,211 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர், தேர்வினை கண்காணிப்பதற்காக 30 சுற்றுச்சூழல், 102 காவல் அலுவலர்கள், 97 கண்காணிப்பு அலுவலர்கள், 10 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

News July 11, 2025

பெங்களூருவில் தெருநாய்களுக்கு சிக்கன் ரைஸ்

image

பெங்களூருவில் கடந்த 6 மாதங்களில் 7000 பேரை தெருநாய்கள் கடித்துள்ளதாம். போதிய ஊட்டசத்து கிடைக்காததால் தான் நாய்கள் இவ்வாறு தாக்குவதாகவும், ஆகையால் அவற்றுக்கு சிக்கன் ரைஸ் வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இதற்காக ஆண்டுக்கு ₹2.88 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளதாம். இத்திட்டம் மூலம் தினமும் 5000 நாய்கள் பயனடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 11, 2025

₹36,900 சம்பளத்தில் அரசு பள்ளிகளில் 1,996 காலியிடங்கள்

image

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட 1,996 காலியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.Ed, B.Sc.Ed படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும் (இதில் தமிழ் கட்டாயம்). ₹36,900- ₹1,16,600 வரை சம்பளம் வழங்கப்படும். முழு தகவலுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

error: Content is protected !!