News April 7, 2025
நயன்தாராவை பாதித்த எஸ்.வி.சேகரின் சாபம்!!

மாதவன், நயன்தாரா நடிப்பில் OTTயில் வெளியான ‘டெஸ்ட்’ கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இப்படத்தில், ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது குறித்து எஸ்.வி.சேகர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘என்னை புக் பண்ணிட்டு, படத்தில் இருந்து விலக்கினால், அப்படம் தியேட்டருக்கு வராது. வந்தாலும் ஓடாது. இது வரலாறு.. தொடர்கிறது’ எனப் பதிவிட்டுள்ளார். பாவம் சாபம் நயனையும் விட்டு வைக்கவில்லை!
Similar News
News April 10, 2025
நீட் விவகாரத்தில் திமுக நாடகம்: எல்.முருகன் சாடல்

டாஸ்மாக் முறைகேட்டை திசை திருப்பவே நீட் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகவும் காங்கிரஸும்தான் என தெரிவித்த அவர் இன்று நீட்டை வைத்து திமுக நாடகமாடுவதாக அவர் விமர்சித்துள்ளார். தற்போது பழங்குடி, பட்டியல் இன சமுதாய மாணவர்கள் அதிக அளவில் நீட் தேர்வில் வெற்றி பெற்று வருவதாகவும் எல்.முருகன் கூறியுள்ளார்.
News April 10, 2025
தமிழகத்தில் 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய் கடித்து காயமடைந்தோர், பலியானோர் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் 2025ல் 8 பேர் பலியாகி இருப்பதாகவும், 1.5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் 43 பேர் பலியானதாகவும், 4.80 லட்சம் பேர் தடுப்பூசி போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 10, 2025
கலைஞரின் கனவு இல்லம் குறித்த புது அப்டேட்

‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி ஆலோசிக்க சென்னையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே 13,388 வீடுகளின் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. அடுத்ததாக 2025-26ஆம் நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ₹3,500 கோடி நிதியும் ஒதுக்கப்படுள்ளது.