News August 27, 2025

இந்தியாவில் சுசூகி நிறுவனம் ₹70,000 கோடி முதலீடு

image

ஜப்பானைச் சேர்ந்த வாகன தயாரிப்பாளரான சுசூகி மோட்டார்ஸ் அடுத்த 6 ஆண்டுகளில், இந்தியாவில் ₹70,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் மின்சார கார் ‘இ விட்டாரா’ அறிமுக நிகழ்ச்சியில் இதனை அந்நிறுவனத்தின் தலைவர் தோஷிஹிரோ சுசூகி தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒரு லட்சம் கோடி முதலீட்டில் 11 லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Similar News

News August 27, 2025

Health Tips: நாக்கில் இந்த அறிகுறிகள் இருக்கா? கவனம்!

image

எப்போதாவது நாக்கில் வலி/ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறதா? அப்படி இருந்தால் அது நாக்கு புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். இதனை கண்டறிய இன்னும் சில அறிகுறிகள் இருக்கின்றன. ▶நாக்கில் 2 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் புண்கள் ▶சிவப்பு/வெள்ளை புள்ளிகள் தோன்றுவது ▶விழுங்குவதில்/பேசுவதில் சிரமம் ▶நாக்கில் உணர்ச்சி இல்லாமல் போவது இதன் அறிகுறிகளாக கருதப்படுகின்றன.

News August 27, 2025

இந்தியர்களுக்கு ரஷ்யாவில் அதிகரித்துள்ள டிமாண்ட்

image

இந்தியர்களை ரஷ்ய நிறுவனங்கள் அதிகளவில் பணியில் சேர்க்க ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் மனித வளம் தேவைப்படுவதால், திறமையான இந்தியர்கள் பணியமர்த்தப்படுவதாக அந்நாட்டுக்கான இந்திய தூதர் வினய் குமார் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் குடியேற்ற விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதால், இந்தியர்களின் பார்வையும் ரஷ்யா பக்கம் திரும்பியுள்ளது.

News August 27, 2025

விஞ்ஞான ரீதியிலான ஊழல்: EPS சாடல்

image

‘கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041’, TN அரசால் சமீபத்தில் வெளியிடப்பட்டடது. இந்நிலையில், DMK-வின் குடும்ப & கட்சி உறவுகளுக்கு நெருக்கமானவர்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், குடியிருப்பு மனை நிலமாகவே வகைப்பாட்டிலேயே இருக்கும்வகையில், இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், இது விஞ்ஞான முறையிலான ஊழலுக்கு வித்திடும் வகையில் உள்ளதாகவும் அவர் சாடினார்.

error: Content is protected !!