News September 25, 2025
லோகோவை மாற்றிய சுசுகி

22 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆட்டோமொபைல் நிறுவனமான சுசுகி தனது பிராண்ட் லோகோவை மாற்றியுள்ளது. 1958 முதல் பயன்பாட்டில் உள்ள S-வடிவ லோகோ முதன்முதலில் 2003-ல் மாற்றப்பட்டது. தற்போது புதிதாக ஷார்ப்பான வடிவத்தில் இருந்து பிளாட்டாக ‘S’ லோகோ மாற்றப்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்தின் ஸ்லோகனும் ‘உங்களின் பக்கம்’ என மாற்றப்பட்டுள்ளது.
Similar News
News September 25, 2025
தமிழகத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

வடக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. முக்கியமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
News September 25, 2025
கட்சியில் அடுத்த வாரிசுக்கு பதவி.. வெடித்தது சர்ச்சை

துணை ஜனாதிபதி CP ராதாகிருஷ்ணனின் மகன் ஹரிசஷ்டிவேல் ராதாகிருஷ்ணனுக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு, திறன் மேம்பாட்டு பிரிவு மாநில இணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே நயினார் நாகேந்திரனின் மகன் பாலாஜிக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட்டது வாரிசு அரசியல் என சர்ச்சையான நிலையில், இதையும் DMK, NTK-வினர் விமர்சித்து வருகின்றனர். உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
News September 25, 2025
TN கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்கும் தெலங்கானா CM

சென்னையில் இன்று நடைபெறும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி பங்கேற்க உள்ளார்.2025-26-ம் ஆண்டுக்கான புதுமைப்பெண், நான் முதல்வன் திட்டங்களை CM ஸ்டாலினுடன் இணைந்து, ரேவந்த் ரெட்டி தொடங்கி வைக்க உள்ளார். கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும், சாதனைகளையும் முன்னிலைப்படுத்தி இவ்விழா 7 பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.