News March 27, 2024
நாடு கடத்தும் முடிவு நிறுத்தி வைப்பு

அமெரிக்காவுக்கு விக்கி லீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தும் முடிவை லண்டன் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. அவரது முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், “மரண தண்டனை, வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட மாட்டாது என்பது போன்ற உத்தரவாதங்களை ஏப்ரல் 16-க்குள் அமெரிக்கா அளிக்க வேண்டும். இல்லையென்றால் அசாஞ்சேவுக்கு மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்படும்” எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தது.
Similar News
News February 18, 2026
சவுரவ் கங்குலி பொன்மொழிகள்

*தோல்விகள் உங்களை வீழ்த்த அனுமதிக்காதீர்கள். அவை அடுத்த வெற்றிக்கான படிக்கட்டுகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். *களத்தில் நீங்கள் எடுக்கும் துணிச்சலான முடிவுகளே உங்களை ஒரு சிறந்த தலைவனாக மாற்றும். * உங்களால் முடியும் என்று நீங்கள் நம்பினால், பாதி கிணற்றைத் தாண்டியதற்குச் சமம்.*திறமை உங்களுக்கு வாய்ப்புகளைத் தரும், ஆனால் கடின உழைப்பும் ஒழுக்கமும் மட்டுமே உங்களை உச்சத்தில் வைத்திருக்கும்.
News February 18, 2026
US போர்க்கப்பலை ஆயுதம் கடல் மட்டத்திற்கு அனுப்பும்: ஈரான்

அமெரிக்கா ஒருபோதும் வெல்ல முடியாது என ஈரானின் உச்ச தலைவர் கொமேனி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வலிமையான ராணுவம் எழுந்து வர முடியாத அளவுக்கு கடுமையாக தாக்கப்படலாம் எனவும் எச்சரித்துள்ளார். ஈரானை சுற்றியுள்ள US போர்க்கப்பலை சுட்டிக்காட்டிய அவர், போர்க்கப்பலை விட ஆபத்தானது, அதை கடல் மட்டத்திற்கு அனுப்பக்கூடிய ஆயுதம் எனவும் கூறியுள்ளார்.
News February 18, 2026
இந்தியா பிரான்ஸ் இடையே 21 ஒப்பந்தங்கள் கையெழுத்து

மும்பை வந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை PM மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பாதுகாப்பு, வர்த்தகம், சுகாதாரம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாடுகள் இடையே 21 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. தொடர்ந்து இந்தியாவின் டாடா நிறுவனமும், பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து உருவாகியுள்ள எச்125 ரக ஹெலிகாப்டரை காணொலி வாயிலாக இருவரும் அறிமுகம் செய்து வைத்தனர்.


