News April 21, 2025
ஹெல்மெட் இல்லைனா சஸ்பெண்ட்.. அதிரடி உத்தரவு

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் போலீசாரை சஸ்பெண்ட் செய்ய டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் இருப்பது, பொது இடங்களில் ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் போலீசார் ஈடுபட்டால் அவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனைத்து கமிஷனர்கள் மற்றும் எஸ்.பிக்களுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 7, 2025
11 மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கும்

அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 7 மணி வரை) TN-ல் உள்ள 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, சாலைகளில் கவனமாக பயணிக்கவும் மக்களே. உங்கள் ஊரில் மழை கொட்டுகிறதா?
News December 7, 2025
டிசம்பர் 7: வரலாற்றில் இன்று

*1926–அரசியல்வாதி கே.ஏ.மதியழகன் பிறந்தநாள் *1939–பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பிறந்தநாள் *1941–PEARL HARBOUR தாக்குதலில் 2,402 வீரர்கள் உயிரிழந்தனர்
*1949-கொடி நாள் கடைபிடிப்பு *2016–நடிகர், பத்திரிகையாளர் சோ நினைவு நாள்
News December 7, 2025
பிக்பாஸில் இந்த வார எவிக்ஷன்.. இவர் தான்

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் பிரஜின் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வார எவிக்ஷனில் கனி, விஜே பாரு, விக்கல்ஸ் விக்ரம், அமித், பிரஜின், சாண்ட்ரா, FJ, கானா விநோத், சுபிக்ஷா குமார் உள்ளிட்டோர் நாமினேட் ஆகியிருந்தனர். இந்நிலையில் குறைவான வாக்குகளை பெற்றதால் பிரஜின் எலிமினேட் செய்யப்பட்டதாக நம்பத்தகுந்த பிக்பாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அமித், சுபிக்ஷா எவிக்ட் ஆனதாக வதந்தி பரவியது.


