News March 24, 2025
சுஷாந்த் தற்கொலை .. ரியா வழக்கறிஞர் விளக்கம்

சுஷாந்த் சிங் தற்கொலையில் ரியா சக்ரவர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை என ஆரம்பத்தில் இருந்தே கூறி வருவதாக அவரது வழக்கறிஞர் மனேஷிண்டே விளக்கமளித்துள்ளார். சுஷாந்த் இறக்கும்போது 2 -3 வேலைக்காரர்கள் வீட்டில் இருந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையிலும் மரணத்திற்கான காரணம் மூச்சுத்திணறல் என குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படி இருந்தபோதிலும் ரியாவை சுஷாந்த் குடும்பத்தினர் சிக்க வைத்ததாக குற்றம் சாட்டினார்.
Similar News
News November 24, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹1,000 குறைந்தது

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி இன்று ஒருகிராம் வெள்ளி விலை ₹1 குறைந்து ₹171-க்கும், கிலோ வெள்ளி ₹1,000 குறைந்து ₹1,71,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இறங்கு முகத்தில் இருப்பதால், நம்மூரிலும் வரும் நாள்களில் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News November 24, 2025
SC-ன் 53-வது தலைமை நீதிபதி.. யார் இந்த சூர்யகாந்த்?

ஹரியானாவின் ஹிசாரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த இவர், பஞ்சாப், ஹரியானா ஐகோர்ட்டுகளில் நீதிபதியாகவும், 2018-ல் இமாச்சல் ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாகவும் பணிபுரிந்துள்ளார். 2019 மே மாதம் SC நீதிபதியானார். J&K 370 சட்டப்பிரிவு நீக்கம், பிஹார் SIR, பெகாசஸ் உள்ளிட்ட முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளை வழங்கிய அமர்வுகளில் சூர்யகாந்த் அங்கம் வகித்திருந்தார்.
News November 24, 2025
இந்து கல்லூரியில் முஸ்லிம் மாணவர்கள்.. பாஜக எதிர்ப்பு

ஜம்மு & காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 42 முஸ்லிம், 8 இந்து மாணவர்கள் சேர்க்கப்பட்டிருப்பது, அரசியல் ரீதியான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, VHP, பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் துணைநிலை ஆளுநரிடம் மனு அளித்துள்ளன. ஆனால், நீட் தகுதி தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.


