News March 27, 2024

தள்ளிப் போகும் சூர்யாவின் ‘புறநானூறு’

image

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘புறநானூறு’ படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போவதாக தகவல் கசிந்துள்ளது. இந்தி திணிப்பை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, வரும் ஏப்ரல் மாதம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால், மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், படத்தை தொடங்குவது சரியாக இருக்காது என படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Similar News

News February 16, 2026

த்ரிஷாவிடம் நயினார் பகிரங்க மன்னிப்பு கேட்கணும்: MP சுதா

image

அதிமுகவில் இருந்தபோது பெண் உரிமை பற்றி பேசிய நயினார், தற்போது பெண்களின் மாண்பை குறைத்து பேசுவது RSS, பாஜகவின் வெளிப்பாடு என MP சுதா கூறியுள்ளார். Epstein Files-க்கு பாஜக விளக்கம்கொடுக்க பயப்படுவதாக விமர்சித்த அவர், அக்கட்சியை சேர்ந்த நயினாரிடம் பெண்கள் குறித்து உயர்வான சிந்தனையை எப்படி எதிர்பார்ப்பது என கேட்டார். மேலும், த்ரிஷாவிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News February 16, 2026

மகளிருக்கு ₹5,000 ‘Severance Package’: அதிமுக அதிரடி

image

TN அரசு வழங்கிய ₹5,000, அரசியல் களத்தில் Hot டாபிக்காக உள்ளது. SC/ST துறையின் நிதியை மடைமாற்றம் செய்து வழங்கியதாக எழுந்த சர்ச்சை, அதற்கு <<19151267>>அரசு விளக்கம்<<>>. மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத <<19147751>>பெண்களின் ஆதங்கம்<<>>. என அடுத்தடுத்து செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் IT நிறுவனங்களில் Lay off செய்துவிட்டு கொடுக்கும் நஷ்டஈடுபோன்ற Severance Package என அதிமுகவின் IT விங் தலைவர் ராஜ் சத்யன் சாடியுள்ளார்.

News February 16, 2026

அத்வாலேவை களமிறக்கும் பாஜக வியூகம் எடுபடுமா?

image

தமிழகத்தில் இதுவரை <<19146858>>கால் பதிக்காத அத்வாலே<<>>, கரும்பு சின்னத்தில் 51 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்தது கவனம் பெற்றுள்ளது. அத்வாலேவின் இந்த முடிவுக்கு பின்னால் பாஜக உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே திமுக கூட்டணியின் தலித் ஓட்டுகளை குறிவைத்து விஜய் அரசியல் செய்கிறார். இந்நிலையில் தலித் மக்கள் அதிகம் இருக்கும் 51 தொகுதிகளில் தலா 500 ஓட்டுகள் பிரித்தாலும் அது திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாம்.

error: Content is protected !!