News August 24, 2024
KKR அணி கேப்டனாகும் சூர்யகுமார்?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் IPL மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், 2025 முதல் அணியை, SKY வழிநடத்த வேண்டும் என KKR அணி நிர்வாகம் விரும்புவதாக கூறப்படுகிறது. தற்போது இந்திய T20 அணியின் கேப்டனாக SKY உள்ளதால் KKR நிர்வாகம் இந்த முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. அதேநேரம், ஷ்ரேயஸ் மும்பை அணிக்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News September 16, 2025
WFH to Weekend தலைவரான விஜய்: தமிழிசை

Work from home தலைவராக இருந்த விஜய், தற்போது Weekend தலைவராக மாறியுள்ளதாக தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். மேலும், பரப்புரை சென்ற இடங்களில் விஜய்க்கு வந்தது, அவரை பார்க்க வந்த கூட்டமா (அ) வாக்களிக்கும் கூட்டமா என்பது இனிதான் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, விஜய்யின் மாநாட்டில் கூடிய கூட்டம் ரசிகர்கள் கூட்டம், தொண்டர்கள் அல்ல என்று தமிழிசை கூறியிருந்தார்.
News September 16, 2025
IND A vs AUS A: விக்கெட் வீழ்த்தாமல் திணறும் இந்தியா

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி., A அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி., அணி பேட்டிங் ஆடி வருகிறது. முதல் இன்னிங்ஸின் டீ பிரேக் வரை ஒரு விக்கெட் கூட இழக்காமல், இந்திய அணியை திணறடித்து வருகிறது. இதுவரை விக்கெட் இழப்பின்றி, 198 ரன்களை அந்த அணி எடுத்துள்ளது. சாம் கோன்ஸ்டாஸ் சதம் (101 ரன்கள்) அடித்த நிலையில் களத்தில் உள்ளார்.
News September 16, 2025
ஆங்கில வெப் சீரிஸில் சித்தார்த்

‘Unaccustomed Earth’ என்ற ஆங்கில வெப் சீரிஸில் சித்தார்த் நடிக்கவுள்ளார். இவருடன் ‘Slumdog Millionaire’ படத்தில் நடித்திருந்த ஹாலிவுட் நடிகை ஃபெரிடா பிண்டோ ஹீரோயினாக நடிக்கிறார். Jhumpa Lahiri என்ற பிரிட்டிஷ் – ஆங்கில எழுத்தாளரின் சிறுகதை தொகுப்பை தழுவி இத்தொடர் தயாராகிறது. புகழ்பெற்ற Warner Brothers நிறுவனம், இத்தொடரை தயாரிக்கிறது. இந்த தொடர் நேரடியாக Netflix தளத்தில் வெளியாகவுள்ளது.