News December 23, 2024
சூர்யா 44 டைட்டில் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு

சூர்யா 44 படத்தின் தலைப்புடன் கூடிய டைட்டில் டீசர் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது 2டி தயாரிப்பு நிறுவனம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். கேங்க்ஸ்டர் பிளஸ் காதல் கதையாக உருவாகியுள்ள படத்தின் டைட்டில் டீசர் கிறிஸ்துமஸ் பரிசாக டிச.25 வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
Similar News
News September 10, 2025
வெள்ளை அறிக்கை மட்டும் விளங்கி விடுமா? TRB ராஜா

CM ஸ்டாலினின் சமீபத்திய வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று EPS வலியுறுத்தியிருந்தார். இதற்கு, வெள்ளை அறிக்கை கொடுத்தால் மட்டும் விளங்கிவிடுமா? என்று TRB ராஜா பதிலடி கொடுத்துள்ளார். CM முன்பு பயணித்த நாடுகளுடன் போடப்பட்ட 36 ஒப்பந்தங்களில் 12 ஒப்பந்தங்கள், உற்பத்தி நிலையை எட்டிவிட்டன என்றும், 11 நிறுவனங்களின் நில எடுப்பு பணிகள் நடப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.
News September 10, 2025
மாணவர்கள் கல்வியில் சிறக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
தந்நோ வாணி: ப்ரசோதயாத்
பொருள்:
பேச்சின் தெய்வத்தை நாம் தியானிக்கிறோம், ஆசைகளை நிறைவேற்றுபவர் மீது நாம் கவனம் செலுத்துகிறோம், தெய்வீகம் நம்மை ஊக்கப்படுத்தி வழிகாட்டட்டும். SHARE IT.
News September 10, 2025
BREAKING: கூட்டணியில் இணைகிறேன்.. TTV ட்விஸ்ட்

TTV, OPS மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்று நயினார், அண்ணாமலை நேற்று அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில், NDA கூட்டணி முதல்வர் வேட்பாளரான EPS-ஐ மாற்றினால், கூட்டணியில் இணைவதாக TTV அறிவித்துள்ளார். இந்த ட்விஸ்டை சற்றும் எதிர்பார்க்காத BJP தலைமை, செங்கோட்டையனை போல், தினகரனையும் சமாதானம் செய்ய முயற்சி செய்து வருகிறது. இதற்கான அசைன்மென்ட் அண்ணாமலையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.