News September 5, 2025
ஆச்சர்யம் ஆனால் உண்மை..!

நம்மைச் சுற்றி ஏராளமான ஆச்சர்யங்கள் நிறைந்துள்ளன. இயற்கையின் அதிசயங்களும், அறிவியலின் உண்மைகளும் பின்னிப் பிணைந்ததுதான் இந்த பூமி. இவற்றை நாம் அறிய வரும்போது, அவை நமக்கு பல விதமான உணர்வுகளை தருகின்றன. அந்தவகையில், விநோதமாக தோன்றும், அதே சமயத்தில் அறிவியல் உண்மையாக இருக்கும் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். மேலே Swipe செய்து அதை அறிந்து கொள்ளுங்கள்.
Similar News
News September 8, 2025
ரயில்வேயில் வேலை… உடனே விண்ணப்பியுங்கள்

தெற்கு ரயில்வேயில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெற்கு ரயில்வேயில் 3,518 அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கான கல்வி தகுதி 10th, 12th அல்லது ITI முடித்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி விண்ணப்பிக்க வயது 15 முதல் 24 வரை ஆகும். இதற்கு வரும் 25ஆம் தேதிக்குள் https://sronline.etrpindia.com/rrc_sr_apprenticev1/ தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
News September 8, 2025
CM ஸ்டாலின் மீது இயக்குநர் கடும் விமர்சனம்

கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தில் CM ஸ்டாலின் மரியாதை செலுத்தியதை இயக்குநர் லெனின் பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். தனது X தள பதிவில் அவர், உழைக்கும் மக்களாகிய தூய்மை தொழிலாளிகள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க CM ஸ்டாலின் காவல்துறையை ஏவி அவர்களை அடித்து விரட்டியதாக சாடியுள்ளார். CM ஸ்டாலினை போலி சமூகநீதி முதல்வர் என்று லெனின் பாரதி தெரிவித்துள்ளார்.
News September 8, 2025
கேப்டனை திட்டி வளர்ந்தவர் சீமான்: விஜய பிரபாகரன்

சீமான் டிரெண்டிங்கில் இருக்கும் நபர்களை திட்டுபவர் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்றைய காலக்கட்டத்தில் டிரெண்டிங்கில் இருந்த கேப்டனை திட்டி சீமான் பெரிய ஆளாகினார் எனவும் பிறரை திட்டியே வாக்குகளை பெற்று கட்சியை வளர்த்தார் என்றும் கூறினார். மேலும் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என விஜய பிரபாகரன் பேசினார்.