News October 13, 2025
ஆச்சரியம் ஆனால் உண்மை..!

நம்மைச் சுற்றி ஏராளமான ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன. இயற்கையின் அதிசயங்களும், அறிவியலின் உண்மைகளும் பின்னிப் பிணைந்ததுதான் இந்த பூமி. இவற்றை நாம் அறியும் போது, அவை நமக்கு பல விதமான உணர்வுகளை தருகின்றன. அந்தவகையில், விநோதமாக தோன்றும் அதே சமயத்தில் அறிவியல் உண்மையாகவும் இருக்கும் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். மேலே Swipe செய்து அதை அறிந்து கொள்ளுங்கள்.
Similar News
News October 13, 2025
BREAKING: தமிழகத்தில் ED அதிகாரிகள் அதிரடி ரெய்டு

மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிப் சிரப் குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் தமிழகத்தில் ED அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஸ்ரீசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதன் வீடு, தமிழக அரசின் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீபா ஜோசப், கார்த்திகேயன் வீடுகளில் அதிகாலை முதலே இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த வழக்கில் 2 அதிகாரிகளை TN அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருந்தது.
News October 13, 2025
அதிமுக, பாஜக துணையுடன் தவெக அற்ப அரசியல்: திமுக

கரூரில் இறந்தவர்களை வைத்து ADMK, BJP துணையுடன் TVK அற்ப அரசியல் செய்வதாக DMK விமர்சித்துள்ளது. RS பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், TVK சம்மந்தப்பட்ட கரூர் வழக்கில் மறைமுகமாக, இறந்தோர் குடும்பத்தினரிடம் முறைகேடாக கையெழுத்து பெற்றும், பணத்தாசை காட்டியும் CBI விசாரணை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பாஜகவின் ‘வாஷிங் மெஷின்’ அரசியல் அம்பலமாகியுள்ளது எனவும் விமர்சித்துள்ளார்.
News October 13, 2025
சிக்கந்தர்: AR முருகதாஸை சாடிய சல்மான் கான்

‘சிக்கந்தர்’ பட தோல்விக்கு சல்மான் கானும் ஒரு காரணம் என AR முருகதாஸ் கூறியிருந்தார். குறிப்பாக, சல்மான் கான் ஷூட்டிங்கிற்கு இரவு 9 மணிக்கு வந்ததால் பல சீன்களை, தான் நினைத்தபடி எடுக்க முடியவில்லை என்று கூறியிருந்தார். தாமதமாக வந்ததை ஒப்புக் கொண்ட சல்மான் கான், இப்படத்தை முதலில் தயாரிக்கவிருந்த சஜித் நதியத்வாலா எஸ்கேப் ஆகிவிட்டதாக, ARM-ன் கதை தோல்வி அடைந்ததை மறைமுகமாக சாடியுள்ளார்.