News September 20, 2025
ஆச்சர்யம் ஆனால் உண்மை..!

நம்மைச் சுற்றி ஏராளமான ஆச்சர்யங்கள் நிறைந்துள்ளன. இயற்கையின் அதிசயங்களும், அறிவியலின் உண்மைகளும் பின்னிப் பிணைந்ததுதான் இந்த பூமி. இவற்றை நாம் அறிய வரும்போது, அவை நமக்கு பல விதமான உணர்வுகளை தருகின்றன. அந்தவகையில், விநோதமாக தோன்றும் அதே சமயத்தில் அறிவியல் உண்மையாகவும் இருக்கும் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். மேலே Swipe செய்து அதை அறிந்து கொள்ளுங்கள்.
Similar News
News September 20, 2025
தனி விமானம் மூலம் நாகைக்கு பறந்தார் விஜய்

செப்.13-ல் தேர்தல் பரப்புரையை தொடங்கிய விஜய், சனிக்கிழமைதோறும் மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், இன்றைய தினத்துக்கான பிரசாரத்தை மேற்கொள்ள, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அவர் நாகைக்கு புறப்பட்டார். புத்தூர் ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே இன்று நண்பகல் 12.30 மணியளவில் விஜய் உரையாற்றவுள்ளார். அரைமணிநேரம் மட்டுமே காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
News September 20, 2025
கூட்டாளியான பாக்.,-சவுதி; உடைத்து பேசிய இந்தியா

பாக்.-சவுதி இடையே <<17745829>>ராணுவ ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாலும், <<>> இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவுதி செயல்படும் என நம்புவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான உறவு மேம்பட்டு வருவதாகவும், சவுதி பரஸ்பர நலன்களை கருத்தில் கொள்வார்கள் எனவும் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது. மேலும், பாகிஸ்தானோடு வேறு அரபு நாடுகள் ஒப்பந்தம் மேற்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News September 20, 2025
மூலிகை: கசகசாவின் மருத்துவ குணங்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி,
➛கசகசாவில் அதிக அளவு காப்பர் மற்றும் கால்சியம் சத்துக்கள் இருப்பதால் இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
➛ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
➛பொட்டாசியம் சிறுநீரக கற்களை குணப்படுத்தக்கூடியது.
➛கசகசா, முந்திரி, பாதம் ஆகியவற்றை பொடியாக்கி காலை, மாலை என இருவேளை உண்டுவர உடல் வலிமை பெறும். SHARE IT.