News September 13, 2024
ஆச்சரியம்: ஒரே பள்ளியில் 46 இரட்டையர்கள்..!

பஞ்சாப்பின் ஜலந்தரில் உள்ள ஒரு பள்ளியில் 46 இரட்டையர்கள், 2 ட்ரிப்லட்ஸ், ஒரே மாதிரி தோற்றமுடைய 20க்கும் மேற்பட்டவர்கள் படிப்பது தெரியவந்துள்ளது. செய்தியாளர் ஒருவர் இது குறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோதுதான் பள்ளி முதல்வருக்கே இது தெரியவந்ததாம். டேட்டாவை ஆய்வு செய்தபோது வியப்பாக இருந்ததாகவும், குழப்பத்தை தவிர்க்க வெவ்வேறு பிரிவுகளில் மாணவர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.
Similar News
News November 27, 2025
Sports 360°: இன்று WPL வீராங்கனைகள் ஏலம்

*சுல்தான் அஸ்லான்ஷா ஹாக்கி தொடரில், இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வென்றது. * WPL வீராங்கனைகள் ஏலம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. *சையத் முஷ்டாக் அலி தொடரில், தமிழகத்தை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வென்றது. *Under-17 ஆசிய கோப்பை குவாலிஃபையர்ஸில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் சீன தைபேவை வீழ்த்தியது. *டி-20 ஆல்ரவுண்டர் தரவரிசையில் சிக்கந்தர் ராஸா முதலிடம் பிடித்துள்ளார்.
News November 27, 2025
கேரள வாக்குச்சீட்டுகளில் தமிழ்

டிச.9, 11 ஆகிய தேதிகளில் கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் மொழி சிறுபான்மையினர் வசிக்கும் வார்டுகளில், வாக்குச்சீட்டுகளிலும் வாக்களிப்பதற்கான அடையாள சீட்டுகளிலும், வேட்பாளர்களின் பெயர்கள் தமிழ், கன்னடத்தில் இருக்கும் என ECI அறிவித்துள்ளது. குறிப்பாக, திருவனந்தபுரம், பாலக்காடு, வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் தமிழ் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 27, 2025
நவம்பர் 27: வரலாற்றில் இன்று

*மாவீரர் நாள்.
*1895 – நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்த ஆல்ஃபிரட் நோபல், தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.
*1940 – புரூஸ் லீ பிறந்தநாள்.
*1977 – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்.
*1986 – சுரேஷ் ரெய்னா பிறந்தநாள்.
*2008 – முன்னாள் PM வி.பி.சிங் நினைவுநாள்.


