News March 28, 2024
சூர்யாவின் ‘அஞ்சான்’ ரீ-ரிலீஸ் செய்யப்படும்

சூர்யா நடித்த ‘அஞ்சான்’ திரைப்படம், விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். சென்னை கமலா திரையரங்கில் ‘பையா’ திரைப்படம் நேற்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அதனை ரசிகர்களுடன் கண்டு ரசித்த லிங்குசாமி, அஞ்சான் படத்தின் தோல்விக்கு காரணம் அதன் நீளம் தான். அதனால் படத்தை ரீ-எடிட் செய்து, ரிலீஸ் செய்யப் போகிறேன்” எனக் கூறியது சூர்யா ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்தி உள்ளது.
Similar News
News August 31, 2025
RECIPE: சத்துக்கள் நிறைந்த முடக்கத்தான் தோசை

◆உடம்பின் அனைத்து மூட்டுக்கும் முடக்கத்தான் வலிமை கொடுக்கும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
➥இட்லி அரிசியை தண்ணீரில், 5 மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
➥கிரைண்டரில் அரிசியுடன், கட் செய்த முடக்கத்தான் கீரை, மிளகு, சீரகம், உப்பு சேர்த்து, நன்கு தோசை பதத்துக்கு அரைத்து கொள்ளவும்.
➥இந்த மாவை தோசையாக்கி சாப்பிட்டால், சுவையான முடக்கத்தான் தோசை ரெடி. SHARE IT.
News August 31, 2025
மணிப்பூருக்கு செல்லும் பிரதமர் மோடி?

PM மோடி வரும் செப்டம்பர் 2-ம் வாரத்தில் மணிப்பூருக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசுவதுடன், பல்வேறு திட்டங்களை அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் வெடித்த இனக்கலவரத்துக்கு பிறகு ஒருமுறை கூட PM அங்கு செல்லவில்லை என கண்டனங்கள் வலுத்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின் அவர் அங்கு செல்லவுள்ளார்.
News August 31, 2025
டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் அமலாகிறது

TASMAC கடைகளில் மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் நாளை முதல் அமலாகிறது. வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வீசியெறியும் காலி மது பாட்டில்களால் விலங்குகள் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க கஸ்டமரிடம் பாட்டிலுக்கு ₹10 கூடுதலாக பெற்று, பாட்டிலை திருப்பி தரும்போது ₹10 ஒப்படைக்கும் திட்டத்தை அரசு அறிவித்தது. இந்நிலையில், இந்த திட்டம் சிவகங்கை, மதுரை, காஞ்சி, திருவள்ளூரில் நாளை முதல் அமலுக்கு வருகிறது.