News February 11, 2025

விஜய் தேவரகொண்டாவிற்கு வாய்ஸ் கொடுக்கும் சூர்யா

image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 12ஆவது படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நாளை டீசர் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிற மொழி படங்களுக்கு சூர்யா வாய்ஸ் கொடுப்பது இது முதல்முறை அல்ல. முன்னதாக, மணி ரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடித்த ‘குரு’ படத்திற்கும், சூர்யா தமிழ் டப்பிங் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 11, 2025

காங்கோவில் கொடூரம்: 55 பேர் படுகொலை

image

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் (DR Congo) நேற்று அப்பாவி மக்கள் 55 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நாட்டின் வடகிழக்கு பகுதியில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் தங்களுக்குள் சண்டையிட்டு வருகின்றன. இதில் CODECO என்ற குழு, ட்ஜைபா கிராமங்களுக்குள் புகுந்து தாக்கியதில் 55 பேர் பலியாகியுள்ளனர். எரிக்கப்பட்டுள்ள வீடுகளில் இன்னும் பிணங்கள் உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

News February 11, 2025

ரஞ்சிக் கோப்பை: தமிழ்நாடு தோல்வி

image

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, விதர்பாவிடம் தோல்வி அடைந்தது. இன்று நடந்த இறுதிநாள் ஆட்டத்தில் 401 ரன் இலக்கை துரத்திய தமிழ்நாடு, 202 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 198 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பிரதோஷ் ரஞ்சன் பால்(53), சோனு யாதவ்(57) ஆகிய இருவர் மட்டுமே அரை சதம் கடந்தனர். இதையடுத்து, இந்த ஆண்டும் தமிழகத்தின் ரஞ்சி கனவு தகர்ந்தது.

News February 11, 2025

வீட்டிற்கு ஒரு வாக்கை குறி வைக்கும் விஜய்

image

தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இரண்டாவது நாளாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். நேற்று மதியம் சுமார் 2.30 மணி நேரம் அவர்களது சந்திப்பு நடைபெற்ற நிலையில், இன்று ஒரு மணி நேரம் சந்திப்பு நடந்தது. இதில், தவெகவின் வாக்கு வங்கி குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், வீட்டிற்கு ஒரு வாக்கை உறுதி செய்ய பிரசாந்த் கிஷோர் அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!