News March 19, 2024
‘கங்குவா’ புதிய போஸ்டரை வெளியிட்ட சூர்யா

சிவா, சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் டீசர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாக உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. 3D தொழில்நுட்பத்தில், பீரியட் படமாக உருவாகும் இப்படத்தில் 2 கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாக தெரிகிறது. இந்நிலையில், மாலை டீசர் வெளியாவதை குறிப்பிட்டு படத்தின் புதிய போஸ்டரை சூர்யா, தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Similar News
News October 31, 2025
திமுகவில் இணைந்தனர்…

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி என்பது அதிமுகவின் கோட்டை. 2011, 2016, 2021 என தொடர்ந்து இத்தொகுதியில் EPS-ன் வலது கையாக இருக்கும் முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வெற்றி பெற்று வருகிறார். இதனால், இந்த தொகுதியை கைப்பற்றும் பொறுப்பை செந்தில் பாலாஜியிடம் திமுக ஒப்படைத்துள்ளது. இந்நிலையில், மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
News October 31, 2025
ஸ்டாலினை சீரியஸாக எடுக்க வேண்டாம்: கவுதமி

சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என CM ஸ்டாலின் சொல்வதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கவுதமி பேசியுள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்தே தீரும் என்ற அவர், அப்போதுதான் மக்களை காப்பாற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தைக் காப்பாற்ற இபிஎஸ் தலைமையிலான அதிமுகதான் சரியான தேர்வு எனவும் உறுதியாக கூறியுள்ளார்.
News October 31, 2025
பாகுபலி 3 எடுக்க இவ்ளோ பட்ஜெட்டா?

‘பாகுபலி: தி எடர்னல் வார்’ படத்திற்கான பட்ஜெட் ₹120 கோடி என ராஜமௌலி அறிவித்துள்ளார். பாகுபலி 1-ம் கிட்டத்தட்ட இதே பட்ஜெட்டில்தான் எடுக்கப்பட்டது. அனிமேஷனில் உருவாகும் இப்படம் 2027-ல் வெளியாகலாம். இந்நிலையில், இன்று வெளியாகும் ‘பாகுபலி: தி எபிக்’ படத்தின் இடைவேளையில் ‘தி எடர்னல் வார்’ படத்தின் டீசர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


