News January 21, 2025

சூப்பர் ஹீரோவாக நடிக்கும் சூர்யா?

image

சூர்யா தற்போது RJ பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படமும் சூர்யாவின் பட்டியலில் உள்ளது. இந்த படங்களை முடித்த பிறகு, மின்னல் முரளி திரைப்படத்தை இயக்கிய மலையாள இயக்குநர் பசில் ஜோசப்பின் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கான கதையை அவர் சூர்யாவிடம் கூறியதாகவும், இது ஒரு சூப்பர் ஹீரோ கதை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News March 7, 2026

அடுத்தவர் உழைப்பில் குளிர்காயும் திமுக: அதிமுக

image

சைதை துரைசாமியின் ‘மனிதநேயம்’ பயிற்சி மையத்தில் பயின்று வெற்றிபெற்ற மாணவர்களை ‘நான் முதல்வன்’ திட்டத்தில் வென்றதாக கூறி விளம்பரம் செய்வது வெட்கக்கேடு என அதிமுகவின் பாப்புலர் முத்தையா விமர்சித்துள்ளார். அடுத்தவர் உழைப்பில் குளிர்காயும் திமுக அரசு, விளம்பர அரசியல் செய்வதாக சாடிய அவர், மக்கள் வரிப்பணத்தை செலவழித்து பொய் விளம்பரம் செய்வதை விடுத்து, உண்மையான உழைப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.

News March 7, 2026

BREAKING: விஜய் மனைவி அடுத்த பரபரப்பு

image

நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க கோரி, விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். லண்டனில் வசித்து வருவதால், சென்னையில் தனக்கு தனியாக வீடு இல்லை. நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க கோரினால், வழக்கறிஞர் மூலம் விஜய் தரப்பு மிரட்டுவதாக புகார் தெரிவித்துள்ள அவர், விவாகரத்து வரை நீலாங்கரை வீட்டிலேயே வசிக்க அனுமதிக்க வேண்டும் என விஜய்க்கு உத்தரவிட கோரியுள்ளார்.

News March 7, 2026

கமல்ஹாசனுக்கு தெலங்கானா அரசின் உயரிய விருது!

image

கமல்ஹாசனுக்கு தெலங்கானா அரசு ‘பைடி ஜெயராஜ்’ விருது அறிவித்துள்ளது. 2025-ம் ஆண்டுக்கான Gaddar Telangana Film Awards சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. அதில், நடிகர் சிரஞ்சீவிக்கு NTR விருதும், நடிகை ரஷ்மிகாவுக்கு சிறந்த நடிகைக்கான(The Girlfriend) விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமாவில் கோலோச்சிய பைடி ஜெயராஜ், தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றவர்.

error: Content is protected !!