News October 25, 2024

ரஜினி, விஜய்யை முந்திய சூர்யா

image

‘கங்குவா’ படத்தின் தெலுங்கு ரைட்ஸ் ₹25 கோடிக்கு விற்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் நவ.14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. 3D தொழில்நுட்பத்தில் தயாராகிவரும் இப்படம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தெலுங்கு ரைட்ஸ் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது. ‘வேட்டையன்’ ₹16 கோடிக்கும், ‘G.O.A.T’ ₹17 கோடிக்கும் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 1, 2025

14,967 பணியிடங்கள், ₹78,800 வரை சம்பளம்: முந்துங்க!

image

கேந்திரிய வித்யாலயா & நவோதயா வித்யாலயா பள்ளிகளில் காலியாகவுள்ள 14,967 ஆசிரியர் & ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th, UG, PG உடன் B.Ed (பதவிகளுக்கேற்ப). சம்பளம்: ₹18,900 – ₹78,800 (பணிக்கு ஏற்ப). விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.4. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News December 1, 2025

BREAKING: கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது

image

சர்வதேச எண்ணெய் சந்தை நிலவரப்படி, மாத தொடக்க நாளான இன்று (டிச.1) கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ₹10.50 குறைந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ₹1,739.50-க்கு விற்கப்படுகிறது. அதேநேரம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் ₹868.50-க்கே விற்பனை செய்யப்படுகிறது.

News December 1, 2025

அதிமுக எங்களை ஏமாற்றவில்லை: பிரேமலதா

image

ராஜ்யசபா MP விவகாரத்தில் அதிமுக தேமுதிகவை ஏமாற்றவில்லை என பிரேமலதா கூறியுள்ளார். அதிமுகவிடம் MP பதவியை 2025-ல் கேட்டதாக கூறிய அவர், அதிமுகவில் இருந்து 2026-ல் தருவதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், MP சீட் விவகாரத்தை அதிமுக ஏமாற்றிவிட்டதாக பேசி வந்த இவர், இப்படி அந்தர் பல்டி அடித்திருப்பது கூட்டணி கணக்குக்கு தானா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

error: Content is protected !!