News August 19, 2024
அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்ட சூரி

நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கருடன் படத்தின் வெற்றிக்கு பிறகு, சூரிக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு அதிகம் வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இவர் இயக்கத்தில், விமல் நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான ‘விலங்கு’ வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
Similar News
News April 5, 2026
பாகிஸ்தானுடனா கூட்டணி வைச்சோம்? செல்லூர் ராஜு

ஜெ., கடுமையாக எதிர்த்த பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதாக CM ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இந்நிலையில் தாங்கள் பாஜகவுடன் தானே கூட்டணி வைத்துள்ளோம், பாகிஸ்தானுடனா கூட்டணி வைத்திருக்கிறோம் என செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார். திமுக கூட்டணி வச்சா இனிக்கிது, நாங்க தோழமை பாராட்டுனா கசக்குதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News April 5, 2026
விடுமுறை.. தமிழக அரசு கூடுதல் பஸ்கள் அறிவிப்பு

புனித வெள்ளி, வார விடுமுறையையொட்டி மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல 2,257 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது, ஊர்களுக்குச் சென்றவர்கள் விடுமுறை முடிந்து பணியிடங்களுக்கு திரும்ப ஏதுவாக, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இன்று கூடுதல் பஸ்களை அரசு போக்குவரத்துத் துறை இயக்கி வருகிறது. TNSTC செயலி (அ) <
News April 5, 2026
மேலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன்

27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ், மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில், அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் MP விஸ்வநாதன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கார்த்தி சிதம்பரம் ஒருவரையும், மாணிக்கம் தாகூர் மற்றொருவரையும் வேட்பாளராக கைகாட்டியதால் இழுபறி ஏற்பட்டதாக தகவல் வெளியானது.


