News August 10, 2024
நீரஜ் சோப்ராவிற்கு அறுவை சிகிச்சை

நீண்ட நாள்களாக நீடித்து வரும் இடுப்பு வலிக்கு தடகள வீரர் நீரஜ் சோப்ராவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குடலிறக்கத்தால் அவதிப்படுவதன் காரணமாக பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் இறுதி போட்டியில் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், அவரின் பயிற்சியாளரின் பதவி காலம் முடிந்ததால், பயிற்சியாளர் மாற்றம் இருக்கக் கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 5, 2025
கோவை மாணவியை மீட்க தாமதம் ஏன்?: EPS

கோவையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியை 100 போலீஸ் தேடியும் மீட்க நான்கரை மணி நேரம் ஆனது ஏன் என EPS கேட்டுள்ளார். குற்றவாளிகளை பிடித்ததாக CM தம்பட்டம் அடித்துக்கொள்வதாக கூறிய அவர், மாணவியை மீட்க ஏற்பட்ட தாமதத்திற்கு தலைகுனிய வேண்டும் என்றார். மேலும், இருட்டான இடம் என்பதால் தாமதம் ஏற்பட்டது என்ற விளக்கத்தை அளிக்கவே திமுக அரசின் காவல்துறை கூச்சப்பட வேண்டும் என கடுமையாக சாடியுள்ளார்.
News November 5, 2025
ஹைட்ரோஜென் குண்டை வீசவுள்ள ராகுல் காந்தி

டெல்லியில் இன்று பகல் 12 மணிக்கு ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார்.
வாக்குத் திருட்டு தொடர்பான ‘ஹைட்ரஜன் குண்டை’ விரைவில் வெளியிட உள்ளதாக கடந்த செப்டம்பரில் ராகுல் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள பிரெஸ்மீட் இதுதொடர்பானது தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக ராகுல் குற்றம்சாட்டியிருந்தார்.
News November 5, 2025
BREAKING: வந்ததுமே விஜய்க்கு அதிர்ச்சி

தவெக சிறப்பு பொதுக்குழு நடைபெறவுள்ள மாமல்லபுரத்திற்கு காரில் விஜய் வருகை தந்தார். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த தவெக பேனர்கள், கொடிகளை போலீசார் அகற்றியுள்ளனர். இதை பார்த்து விஜய் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தவெகவுக்கு போலீசார் கடும் நெருக்கடி கொடுப்பதாக அக்கட்சியினர் குற்றம் சாட்டிய நிலையில், அனுமதி பெறாமல், பேனர்கள், கொடிகள் வைக்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.


