News February 2, 2025

அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் உடல் நல்லடக்கம்

image

இந்தியாவின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான பத்மஸ்ரீ கே.எம்.செரியன், உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் கடந்த 25ஆம் தேதி காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக முகப்பேர் ஹாஸ்பிட்டலில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று கீழ்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில் டாக்டர்கள், பல்வேறு பகுதி மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Similar News

News March 10, 2026

மனைவிக்கு உருக்கத்துடன் நன்றி சொன்ன சஞ்சு சாம்சன்

image

டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணமான சஞ்சு சாம்சன் தன் மனைவி சாருலதாவுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார். என் வாழ்க்கையில் கிரிக்கெட் எவ்வளவு பெரியது என்பதை புரிந்துகொண்டு, அதை உங்களுக்கானதாகவும் மாற்றியதற்கு நன்றி என கூறியுள்ளார். என் வாழ்க்கையின் சிறந்த பக்கத்தை விட மோசமான பக்கத்திலும் இன்னும் ஆதரவாக நின்றீர்கள்; மிக்க நன்றி, என் அன்பான பொண்டாட்டி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 10, 2026

விஜய் கூட்டணி வைத்தால் 100% வெற்றி உறுதி: ஜெகன் மூர்த்தி

image

விஜய்யின் தவெக NDA கூட்டணிக்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்போம் என பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் பேசிய அவர், விஜய் NDA கூட்டணிக்கு வருவது உண்மையா என தெரியவில்லை. இதுவரை வதந்தியாகவே உள்ளது என்றார். ஒருவேளை விஜய் கூட்டணி வைத்தால் 100% வெற்றி உறுதி எனவும், தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் NDA கூட்டணி தான் வெற்றிபெறும் என்றும் கூறியுள்ளார்.

News March 10, 2026

அந்த மனுஷன் கூட நடிக்க முடியாது.. சோனா ஓபன் டாக்!

image

‘ஆளவிடுங்கடா சாமி, அந்த மனுஷன் கூட நடிக்க முடியாது’ என வடிவேலுவுடன் நடிக்க மறுத்தது குறித்து நடிகை சோனா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ‘குசேலன்’ படத்திற்கு பிறகு வடிவேலுவுடன் நடிக்க 16 பட வாய்ப்புகள் வந்த நிலையில், அவரை தன்னால் ஹேண்டில் செய்ய முடியாது என்பதால் நடிக்க மறுத்ததாக தெரிவித்தார். இதற்கு மேல் எதுவும் பேச முடியாது என குறிப்பிட்ட அவர், சுயமரியாதை முக்கியம் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!