News March 22, 2026

Surety வேண்டாம்.. ₹20 லட்சம் கடன் தரும் திட்டம்

image

முத்ரா கடன் திட்டத்தின் கீழ், ஏழை எளியோரும் தொழில் தொடங்கி, தொழில்முனைவோராக மாற ₹20 லட்சம் வரை எந்த பிணையமும் இல்லாமல் கடன் கிடைக்கிறது. இந்த கடனை 5 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தினால் போதும். அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் கடன் பெறலாம். இத்திட்டத்தை பற்றி மேலும் தெரிந்துகொள்ள https://www.mudra.org.in/ தளத்தை பார்வையிடுங்கள். SHARE.

Similar News

News April 6, 2026

ஜாபர் சாதிக்கிற்கு தொடர்புடைய இடங்களில் சோதனை!

image

சென்னையில் இன்று (6-4-26) எழும்பூர், கீழ்பாக்கம் உள்ளிட்ட 5 இடங்களில் , ஜாபர் சாதிக்கிற்கு தொடர்புடைய அடுக்குமாடி கட்டிடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். எழும்பூரில் உள்ள ஜே எஸ் எம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் நடக்கும் சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் இணைந்து சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

News April 6, 2026

CINEMA 360: இனிமே சிங்கிள் தான்.. ஸ்ருதிஹாசன்!

image

➤6 முறை காதலித்து காயமடைந்ததால், இப்போதைக்கு சிங்கிளாக இருக்க தீர்மானித்திருப்பதாக நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார் ➤லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ படம் ₹3 நாள்களில் ₹3.07 கோடி வசூலித்துள்ளதாம் ➤மோகன்லால் நடித்து நேரடியாக OTT-ல் வெளியான ‘த்ரிஷ்யம் 2’ படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி தியேட்டரில் ரிலீசாகவுள்ளது ➤தனுஷுடனான நட்பு முறிந்ததை பலவீனமாக பார்ப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

News April 6, 2026

பாஜகவுக்கு முக்கியமான நாள்.. அண்ணாமலை செய்த செயல்

image

பாஜகவின் 47-வது நிறுவன தினத்தையொட்டி, தனது இல்லத்தில் கட்சியின் கொடியை அண்ணாமலை ஏற்றியுள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், பாஜகவின் புகழ்பெற்ற பயணத்தை வடிவமைக்க உதவியவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொடியை ஏற்றியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பாஜகவின் கொடி தொண்டர்களின் வியர்வையையும், கடின உழைப்பையும், தியாகங்களையும் உள்ளடக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!