News April 14, 2024

யோகி பாபுவை இயக்கும் சுரேஷ்

image

நடிகர் யோகி பாபு நடிக்க உள்ள அடுத்த படத்தை ‘ஒரு கிடாயின் கருணை மனு’ இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யோகி பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான எந்தப் படமும் பெரியளவில் கவனம் ஈர்க்கவில்லை. இதன் காரணமாக அடுத்தடுத்து தான் நடிக்கவுள்ள படங்களைத் தேர்வு செய்வதில் அவர் மிகுந்த கவனம் செலுத்துகிறாராம். இயக்குநர் சிம்புதேவனின் ‘போட்’ தனக்கு கைகொடுக்கும் என யோகி பாபு நம்புகிறார்.

Similar News

News November 29, 2025

IPL-லில் இருந்து ஓய்வை அறிவித்தார் பாப் டூப்ளசிஸ்

image

2026 IPL தொடரில் விளையாடப் போவதில்லை என தெ.ஆப்பிரிக்கா நட்சத்திர வீரர் பாப் டூப்ளசிஸ் அறிவித்துள்ளார். 14 ஆண்டுகளாக IPL-ல் விளையாடிய நிலையில், இந்தாண்டு ஏலத்துக்கு தனது பெயரை கொடுக்கப் போவதில்லை என கூறியுள்ளார். தனக்கு இதுவரை ஆதரவு கொடுத்த இந்தியர்களுக்கு அவர் நன்றியையும் தெரிவித்துள்ளார். CSK நட்சத்திர வீரராக திகழ்ந்த அவர், RCB DC உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்காக விளையாடினார்.

News November 29, 2025

பன்றியுடன் சண்டை போடாதே: ஆர்த்தி

image

ரவி மோகன் மற்றும் கெனிஷாவை ஆர்த்தி மறைமுகமாக விமர்சித்துள்ளார். பன்றியுடன் சண்டையிடாதே, ஏனெனில் நீயும் பன்றியும் சேற்றில் சிக்கிவிடுவீர்கள், ஆனால் அந்த சேற்றை ரசிப்பது என்னமோ பன்றிதான் என ஆர்த்தி பதிவிட்டுள்ளார். ரவி மோகன் தொடர்ந்த விவாகரத்து வழக்கில், ஒருவரை தாக்கி மற்றவர் கருத்து தெரிவிக்கக்கூடாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளதால், மறைமுகமாக விமர்சித்து இருப்பதாக கூறப்படுகிறது.

News November 29, 2025

இந்தியாவில் கோடீஸ்வரர்கள் அதிகம் உள்ள நகரங்கள்

image

நாட்டில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்திய Mercedes-Benz Hurun India Wealth Report 2025-ன் படி, இந்த ஆண்டுக்குள், நாட்டில் 8,71,700 கோடீஸ்வர குடும்பங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, எந்த நகரங்களில் அதிக கோடீஸ்வரர்கள் உள்ளனர் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

error: Content is protected !!