News April 3, 2025
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் மம்தா அரசுக்கு பெரும் பின்னடைவு!

மே.வங்கத்தில், 25,000 பள்ளி ஆசிரியர்களுக்கான நியமன உத்தரவை கொல்கத்தா ஐகோர்ட் ரத்து செய்தது. இதனை எதிர்த்து மம்தா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்ஜெய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்தது. மேலும், நேர்மையான முறையில் ஆசிரியர் நியமனத்தை 3 மாதங்களுக்குள் புதிதாக நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News April 4, 2025
அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி!

உலக நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் கூடுதல் வரி விதித்ததன் எதிரொலியாக அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. Dow nosedives 1,679 புள்ளிகளும், Nasdaq 500 புள்ளிகளும் சரிவைக் கண்டதால் முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடியை இழந்துள்ளனர். டிரம்ப் தனது முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் அமெரிக்க பொருளாதாரமும், மக்களும் கடும் இன்னல்களை சந்திக்க நேரிடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
News April 4, 2025
வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்காக வக்ஃப் மசோதா திருத்தம்: மோடி

நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டது திருப்புமுனை தருணம் என்று மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சமூக பொருளாதார நீதி, வெளிப்படைத் தன்மையை உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தேடல் இது. நீண்ட காலமாக குரல் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்காக வக்ஃப் மசோதா திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் ஒரு வலுவான, இரக்கமுள்ள, உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கான சிறந்த வழி என்றும் தெரிவித்துள்ளார்.
News April 4, 2025
‘அதிமுக பொதுச் செயலாளர் செங்கோட்டையன்’ போஸ்டர்

மதுரையில் இபிஎஸ்-க்கு எதிராகவும், செங்கோட்டையனுக்கு ஆதரவாகவும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் தமிழக அரசியலில் புதிய புயல் கிளம்பியுள்ளது. இபிஎஸ் புகைப்படத்தை புறக்கணித்துவிட்டு, செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஹைலைட் என்னவென்றால் ‘அதிமுக பொதுச் செயலாளர் செங்கோட்டையன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது தான். இதுகுறித்து உங்கள் கருத்து?