News April 28, 2025
நெட்பிளிக்ஸ், அமேசானுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

சென்சார் கட்டுப்பாடு இல்லாததால், OTT-ல் வெளிவரும் பல தொடர்கள், படங்களில் ஆபாசக்காட்சிகள் அதிகமாக இருப்பதாக தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இது குறித்த மனு மீதான விசாரணையில், விளக்கம் அளிக்க அமேசான், நெட்பிளிக்ஸ், உள்ளிட்ட OTT தளங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், விசாரணையின் போது இந்த தளங்களுக்கும் சமூக பொறுப்பு இருப்பதாகவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News April 28, 2025
77 நீதிபதிகள் பணியிட மாற்றம்

மாவட்ட நீதிபதிகள் 77 பேரை பணியிட மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி நந்தினி தேவி காலையில் அறிவித்த நிலையில், மாலையில் அவர் மாற்றப்பட்டுள்ளார்.
News April 28, 2025
3 குழந்தைகளுக்கு தாயான ஸ்ரீலீலா…. குவியும் பாராட்டு

தெலுங்கில் முன்னணி நடிகையான ஸ்ரீலீலா தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இவர் 2022-ல் 2 மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில், 3-வதாக ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்துள்ளதாக ஸ்ரீலீலா தெரிவித்துள்ளார். அக்குழந்தையை முத்தமிடும் புகைப்படத்தை அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அவரின் தாய் உள்ளத்துக்கு பாராட்டுகள் குவிகின்றன.
News April 28, 2025
இபிஎஸ்-க்கு அரசியல் வீழ்ச்சி கவுண்ட்டவுன் ஸ்டார்ட்

அமைச்சரவை மாற்றம் குறித்து விமர்சித்த இபிஎஸ்-க்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். குடும்பத்திற்காக கூட்டணி வைத்த இபிஎஸ்ஸின் அரசியல் வீழ்ச்சியின் கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது எனக் கூறிய அவர், இபிஎஸ் ஆட்சியில் அமைச்சரவை மாற்றமே நடக்கவில்லையா? என கேள்வி எழுப்பினார். மேலும், தோல்வியில் சாதனை படைக்கும் ‘தோல்விசாமி’, அதிமுகவை பாதாள வீழ்ச்சிக்கு கொண்டு செல்வதாகவும் விமர்சித்துள்ளார்.