News August 9, 2024
மணிஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின்

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை, சிபிஐ வழக்கு பதிந்து அவரை கைது செய்தன. இதில் ஜாமின்கோரி சிசோடியா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 17 மாதங்கள் ஆகியும் விசாரணை தொடங்காததால் சிசோடியா பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி, அவருக்கு ஜாமின் அளித்து உத்தரவிட்டனர்.
Similar News
News January 23, 2026
தமிழ்நாடு NDA பக்கம் நிற்கிறது: PM மோடி

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவுசெய்துவிட்டதாக PM மோடி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் NDA-வின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருக்கும் அவர், தமிழ்நாடு NDA-வின் பக்கம் நிற்கிறது எனவும், NDA அரசின் சாதனைகள் மாநில மக்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News January 23, 2026
பூமியை பார்த்தால் முட்டாள் தனமாக இருக்கும்: சுனிதா

விண்ணில் இருந்து பூமியை பார்க்கும் போது வாழ்க்கை பற்றி நமது எண்ணங்கள் மாறுபடும் என <<18912474>>சுனிதா வில்லியம்ஸ்<<>> தெரிவித்துள்ளார். நாம் அனைவரும் ஒரு கிரகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அவர், நாம் அனைவரும் ஒன்றிணைந்து, எளிதாக பணியாற்ற வேண்டும் என்பதை உணர வைக்கும் என்றார். மேலும், பூமியில் மனிதர்கள் இடையே நடக்கும் பிரச்னைகள், வாக்குவாதங்கள் எல்லாம் முட்டாள்தனமாக தோன்றும் எனவும் கூறியுள்ளார்.
News January 23, 2026
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

நேற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று (ஜன.23) மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹450 அதிகரித்து ₹14,650-க்கும், சவரனுக்கு ₹3,600 அதிகரித்து ₹1,17,200-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வருவதால், வரும் நாள்களிலும் விலை உயரும் என கூறப்படுகிறது.


